3-12-21/11.06am
சென்னை : டைரக்டர் மோகன் ஜி சத்திரியன் பெரிய மோசடி நடக்கிறது கவனமாக இருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் அறந்தாங்கி மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ” நானும் அந்த பெண்ணும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். அனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜெகன் அளித்துள்ள ஆட்கொணர்வு மனுவில் ” நானும் ஒரு பெண்ணும் தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவர்கள் வீட்டில் என் மனைவியை பிரித்து கூட்டி சென்றுவிட்டனர். ஆணவக்கொலை செய்யப்போவதாக எனது மனைவியின் தந்தை மிரட்டுகிறார். மேலும் எனது மனைவி கர்ப்பமாக இருந்தார்.
தற்போது கருவை கலைத்துவிட்டதாக சொல்கிறார்கள். எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்” என தெரிவித்திருக்கிறார். அவரது முன்னுக்குப்பின் முரணான மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் அரசுத்தரப்பில் பொய்யான தகவலை அளித்த ஜெகன் மீது அறந்தாங்கி காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை பகிர்ந்த மோகன் ஜி சத்ரியன் “இவ்வளவு பெரிய மோசடி பெண்களை நோக்கி நடைபெறுகிறது. பெண்களே கவனமாக இருங்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
….உங்கள் பீமா