3-12-21/13.44pm
சென்னை : இடதுசாரி பத்திரிக்கையாளர் ஒருவருக்கு மூத்த பத்திரிக்கையாளர் பேட்டியளித்தார். அப்போது அவர் இடது சாரி போராளியா என மிரண்டு போய் நிருபரை உற்றுப் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரங்கராஜ் பாண்டேவுடன் இடது சாரி ஆதரவாளரான ஆவுடையப்பன் நேர்காணல் நடத்தினார். அப்போது இடதுசாரி ஆதரவாளரான அந்த நிருபர் ” திருவள்ளுவர் என்பவர் இயேசு நபிகள் நாயகம் சிவன் போல சாதாரண மனிதன் தானே”என கூறிவிட்டு இயேசு நாதர் இடது சாரி ஆதரவாளர் மற்றும் இடதுசாரி போராளி என பெரிய குண்டை தூக்கிப்போட்டார்.
இதோடு நில்லாமல் இந்துக்களின் தெய்வமான சிவனை சாதாரண மனிதன் என கூறி இந்துக்களின் நம்பிக்கையை நேரடியாக சீண்டினார். இதற்க்கு பதிலளித்த பாண்டே ” இயேசு நபிகள் ராமானுஜர் எல்லோரும் இறை தூதர்கள். திருவள்ளுவர் தத்துவ ஞானி” என குறிப்பிட்டார். மேலும் வம்பிழுக்கும் விதமாக அந்த இடதுசாரி ஆதரவாளர் இதெல்லாம் நீங்களா சொல்றது தானே என கூறினார்.
இதற்க்கு பளிச்சென பதிலளித்த பாண்டே ” என்னுடைய நம்பிக்கையில் நீங்கள் தலையிட முடியாது. அரசியலமைப்பு எனக்கு கொடுத்திருக்கும் உரிமை. நீங்கள் கொடுக்கும் பெருந்தன்மையில் இல்லை. இது என்னுடைய அடிப்படை உரிமை. இயேசு நாதர் இறைத்தூதர் என்பது என்னுடைய நம்பிக்கை. அதை தடுக்கவோ குறை சொல்லவோ உங்களுக்கு உரிமையில்லை.
திருவள்ளுவரை பற்றி நீங்கள் பேசலாம். ஏனெனில் அவர் தத்துவ ஞானி. ஆனால் இயேசுவையே நபிகளையோ பற்றி பேசமுடியாது. அது எனது நம்பிக்கை. நம்பிக்கையில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது.என்னுடைய ஆன்மீக நம்பிக்கையை தொட வேண்டாம் என கூறவில்லை. தொட கூடாது என சொல்கிறேன். யேசுநாதர் ஒரு போராளி என்று சொல்வது தவறு. அதை அனுமதிக்க கூடாது. கொலை கொள்ளையடிப்பவன் கூட இருப்பார்கள். அவர்களையும் சொல்வீர்களா” என பளிச்சென பதிலளித்தார்.
கேள்வியெழுப்பிய இடது சாரி நிருபர் கடைசிவரை இயேசு திருவள்ளுவர் சிவன் என சுற்றி வந்தாரே தவிர நபிகள் நாயகம் பற்றி வாய் திறந்து கேள்வியெழுப்ப மறந்துவிட்டார். இறை நம்பிக்கையை கேலி செய்யும்விதத்தில் பேசும் யாவரும் கண்டிப்பாக தண்டனைக்குள்ளாக்கப்படவேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
பி.கு; அந்த இடதுசாரி நிருபர் பெயர் ஆவுடையப்பன்.
…..உங்கள் பீமா