Thursday, June 20, 2024
Home > செய்திகள் > ஹெச்.ராஜா விறுவிறு பேட்டி..! ஓ இதுதான் சங்கதியா..?

ஹெச்.ராஜா விறுவிறு பேட்டி..! ஓ இதுதான் சங்கதியா..?

17-2-22/10.30am

சென்னை : பிஜேபி பிரமுகரும் முன்னாள் பிஜேபி தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா அவர்கள் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் புர்ஹா பற்றிய அவரது பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 2006 ல் அஜ்மல்கான் என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓரு மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில் வாக்காளர் அட்டையில் புகைப்படத்தை பயன்படுத்துவது இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதாகவும் அதனால் வாக்காளர் அட்டையில் புகைப்படம் இடம்பெற கூடாது எனவும் வாக்கு செலுத்த புர்ஹா அணிந்து போக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே வாக்களிக்க இஸ்லாமிய பெண் ஒருவர் புர்ஹா அணிந்து சென்றபோது தேர்தல் அதிகாரி முகத்தை காட்டாமல் வாக்களிக்க செல்லமுடியாது என கூற அதன்பிறகே வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் சென்றதாக தெரிகிறது.

`

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள் அந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு ” உங்களுக்கு மதம் முக்கியமென்றால் வாக்களிக்க வேண்டாம். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க முகத்தை காட்டி புகைப்படம் எடுக்கும்போது வாக்களிக்க முகத்தை காட்ட மறுப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இதனால் உங்கள் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

```
```

ஹெச்.ராஜா அவர்கள் இதை மேற்கோள் காட்டி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

…..உங்கள் பீமா