Monday, January 30, 2023
Home > அரசியல் > திருட்டு ரயில்..! முக ஸ்டாலினை விமர்சித்த நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..!

திருட்டு ரயில்..! முக ஸ்டாலினை விமர்சித்த நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..!

22-11-21/13.11pm

கடலூர்: மறைந்த கடல்தீபன் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் திருவுருவபட திறப்புவிழாவில் திருட்டு ரயில் என குறிப்பிட்டு முக ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்த்தார்.

திறப்பு விழாவில் பேசிய சீமான் ” என்னிடம் எப்போதும் கேட்கிறார்கள் உனக்கு எப்படி வருமானம் வருகிறது உணவுக்கு என்ன செய்கிறாய் என ஒரே கேள்வியை அடுக்குகிறார்கள். நான் ஒவ்வொருவரிடமிருந்தும் பணம் பெற்றுக் கொண்டுதான் செலவு செய்கிறேன்.

இதே கேள்வியை கலைஞர் குடும்பத்தை பார்த்து கேட்கலாமே. திருட்டுத்தனமாக ரயிலேறிவந்த கருணாநிதி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது என கேட்கவில்லையே. உதயநிதி தொடர்ந்து படம் எடுக்கிறார். ஆனால் ஒரு படமும் ஓடவில்லை. அடுத்தடுத்த படம் வெளியிட எது நிதி என யாரும் கேட்கவில்லை.

`

எனக்கு சொந்த வீடு இல்லை. இந்த நாட்டை அடைய துடிக்கும் எனக்கு தமிழ்நாடே வீடுதான். நான் இந்த தமிழ் மண்ணுக்காக போராடும் காலத்தில் கருணாநிதி ஆட்சியில் ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு கூட அறை தரமாட்டார்கள். நீட் தேர்வை நீக்குவோம் என கூறிய திமுகவால் ஆறு குழந்தைகளின் உயிர் பறிபோனது தான் மிச்சம். ஜெய்பீம் பட விவகாரத்தை வைத்து பதினைந்து நாட்களாக தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை மூடி மறைத்துவிட்டார்கள்” என காட்டமாக விமர்சித்தார்.

….உங்கள் பீமா