Friday, September 22, 2023
Home > செய்திகள் > இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது..! அஸ்ஸாம் முதல்வர் அதிரடி..!

இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது..! அஸ்ஸாம் முதல்வர் அதிரடி..!

11-11-21/ 13.35pm

இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது. உலகில் எந்த மூலையிலும் இந்துக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் இங்கு வந்து பாதுகாப்பாக இருக்கலாம் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா அதிரடியாக அறிவித்துள்ளார்.

டைம்ஸ் நவ் நடத்திய உச்சிமாநாட்டில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா இந்த கருத்தை தெரிவித்தார். டைம்ஸ் நவ் நிருபர் பத்மஜா ஜோஷி முதல்வரிடம் ” வங்காளதேசத்தை சேர்ந்த வங்காள இந்துக்களுக்கு நீங்கள் குடியுரிமை வழங்குவீர்களா” என கேள்வியெழுப்பினார். அதற்க்கு பதிலளித்த ஹிமந்தா,

`

” உலகில் எந்த பகுதியில் வசிக்கும் இந்துவாக இருந்தாலும் அவர்களது தாய்நாடு இந்தியா தான். இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது. அந்த நிலத்தில் பாதுகாப்பு உறுதியற்ற நிலையில் உணரும்போது ஒவ்வொரு இந்துவுக்கும் இந்தியா வருவதற்கு உரிமை உண்டு. இந்தியன் எனும் சொல் வேண்டுமானால் 1947ல் தோன்றியிருக்கலாம்.

ஆனால் இந்து என்ற சொல் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்னரே தோன்றிவிட்டது. நான் நாகரிகத்தை நம்புகிறேன். அது சனாதன நாகரிகம். அது இந்துக்களின் நாகரிகம். அரசியலமைப்பை உருவாக்கியபிறகே இந்தியா என அழைக்கப்பட்டது. ஆனால் எங்கள் மூலத்திலிருந்து எங்களை துண்டிக்க இயலாது.பாதிக்கப்படும் ஒவ்வொரு இந்துவும் இந்தியா திரும்பவேண்டும்.” என தெரிவித்தார்.

……உங்கள் பீமா