Monday, February 10, 2025
Home > அரசியல் > விண்ணை பிளந்த விடியல் அரசே முழக்கம்..! ஸ்தம்பித்த தமிழகம்..!

விண்ணை பிளந்த விடியல் அரசே முழக்கம்..! ஸ்தம்பித்த தமிழகம்..!

22-11-21/15.59pm

தமிழகம் ; தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்களின் அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் பல நகரங்களில் விடியல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் விண்ணை பிளந்தது.

திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு பொய்யை வாரி வழங்கியது. ஆனால் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் ஒன்றையும் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்துவிட்டது. பெட்ரோல் டீசல் விலை ஆவின் பால் விலை உள்ளிட்ட பலவற்றில் தனது பொய்யான முகத்தை காண்பித்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவின் 22 மாநிலங்கள் குறைத்த பின்னரும் திமுக விலையை குறைக்காமல் சப்பைக்கட்டு கட்டுகிறது என பிஜேபியினர் விமர்சிக்கின்றனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தக்காளி ஒரு கிலோ 120 எனவும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 100 எனவும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

`

மேலும் சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத்தொடுகிறது. திமுக அரசின் நிர்வாக குறைபாடே இதற்க்கு காரணம் என பிஜேபியினர் தொடர் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். மேலும் இந்தியாவில எங்கும் இல்லாத அளவுக்கு கட்டுமான பொருட்களின் விலை தமிழகத்தில் மட்டுமே அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்தும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரியும் தமிழகமெங்கும் பிஜேபி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழக பிஜேபி மகளிரணியினர் இளைஞரணியினர் உட்பட பல பிஜேபி அணிகள் கலந்துகொண்டன.

```
```

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க சார்பில் இன்று நடைப்பெற்றக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வினோஜ் செல்வம், போன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரையில் டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் திரு.ஆத்மா கார்த்திக், மாநில துணைத்தலைவர் திருமதி.மஹாலட்சுமி, புறநகர் மாவட்ட தலைவர் திரு.மஹா சுசீந்திரன்,

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திரு.திருமாறன் ஜி, மாவட்ட பார்வையாளர் திரு.கதலி நரசிங்கபெருமாள், பா.ஜ.க அரசு தொடர்பு பிரிவு திரு.ராஜ ரத்தினம், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி தலைவர் திரு.பழனிவேல் உள்ளிட்ட மாநில – மாவட்ட – மண்டல நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணி தொண்டர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.
கலந்து கொண்டனர்.

https://twitter.com/mdrsaravanan1/status/1462695454118875138?s=20

….உங்கள் பீமா