Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > அளவா ஊது ராஜா..! பத்திரிகையாளரை பந்தாடிய டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி

அளவா ஊது ராஜா..! பத்திரிகையாளரை பந்தாடிய டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி

25-4-22/10.28AM

சென்னை : தனியார் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ் 18 சார்பில் மக்கள்சபை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் புதியதமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். அவர் பேசுகையில் விசிக மற்றும் திமுக தொண்டர்கள் அவரை பேசவிடாமல் அத்துமீறி நடந்துகொண்டனர்.

இந்த செய்தியை ராஜா சண்முகசுந்தரம் எனும் பத்திரிக்கையாளர் தனது ட்விட்டரில் கிருஷ்ணசாமியை பாதுகாத்த திருமா என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார். “இன்று நியூஸ் 18 தொலைக்காட்சி நடத்திய மக்கள் சபை நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி பேசும் போது அவரது வார்த்தைகளுக்கு விசிக, திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட, கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்த மைக்கை பிடித்து தொண்டர்களை சமாதானம் செய்தார் திருமா.

தேர்தல் சபையில் எதிரெதிர் துருவங்களாக ஆகிவிட்ட கிருஷ்ணசாமியும் திருமாவளவனும் அக்னி நட்சத்திரம் கிளைமாக்ஸ் மாதிரி மக்கள் சபையில் ஒன்றாய் நின்றிருக்கின்றனர். கிருஷ்ணசாமி என்றில்லை அங்கு யாருக்கு இந்த நிலை ஏற்பட்டாலும் பாதுகாப்பாய் நின்றிருப்பார் திருமா” என தனது பதிவில் கூறியுள்ளார். இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி,

“பல சாதிவெறி சண்டியர்களையும், கொம்பனுகளையும் அடக்கியது எங்க வரலாறு. சொந்த சாதியினரை கூட காப்பாற்ற வக்கில்லாமல் குடிசைய கொழுத்திடான்,

வாயில மலத்த வச்சுட்டானு ஒப்பாரி வைத்து NGO மூலம் வசூல் மட்டுமே செய்யும் அட்டகத்திகள் எங்களை பாதுகாத்தார்களாம் அளவா ஊது ராஜா” என பதிலடி கொடுத்துள்ளார்.

…..உங்கள் பீமா