25-12-21/10.18am
கேரளா : கேரளா கடவுளின் பூமி என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொலைகளின் நகரம் ரத்தபூமி என நெட்டிசன்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றாற் போல அடுத்தடுத்த உள்நோக்கத்தோடு கூடிய கொலைகள் கேரளாவில் அதிகரித்து வருகின்றன.
நேற்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு நிகழ்ச்சிக்காக திருவனந்தபுரம் சென்றிருந்தார். அவரது கான்வாயை இடிப்பது போல ஒரு வாகனம் மிக அருகில் சென்றது. அதனால் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசுத்தலைவர் கான்வாய் மற்றும் பாதுகாப்புக்கு சென்றிருந்த 14 வாகனங்களும் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பூஜாப்புரா சென்று கொண்டிருந்தன.
தும்பா செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியிலிருந்து பொதுமருத்துவமனைக்கு செல்லும் பாதையில் காத்துக்கொண்டிருந்த ஒரு மர்ம வாகனம் பாதுகாப்பு வாகனங்களில் எட்டாவது வாகனத்தை மோதும் வகையில் சென்றது. அதனால் பதறிய ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அடுத்தடுத்து பிரேக் போட்டு நிறுத்தின. பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த வாகனத்தை பார்த்ததில் அதில் திருவனந்தபுரம் மேயர் என எழுதப்பட்டிருந்தது.
பின்னர் அதில் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் பயணித்தது தெரியவந்தது. இதுகுறித்து இன்டெலிஜென்ஸ் மற்றும் போலீசார் கூறுகையில் ” இது கணநேரத்தில் தவிர்க்கப்பட்ட விபத்து. குடியரசு தலைவர் பிரதமர் ஆகிய பெரும்புள்ளிகள் பயணிக்கையில் இடையில் வாகனங்களை நிறுத்த கூடாது. இது ஒரு ப்ரோட்டோகால்.
இந்த சம்பவத்தில் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தனர். சம்பவத்தை பார்த்த மக்கள் கூறுகையில் மேயரின் வாகனம் அந்த கான்வாய் வரும்வரை காத்திருந்தது. பின்னர் திடீரென கிளம்பியது. இந்த மேயர் குடியரசுத்தலைவருடனேயே மிடுக்காக நிகழ்ச்சிக்கு செல்லவேண்டி இந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கலாம்” என கூறுகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் உளவுத்துறை அதிகாரிகள் கேரள அரசின் மீது கடும்கோபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
…..உங்கள் பீமா