Monday, February 10, 2025
Home > செய்திகள் > கண்துடைப்பு அறிக்கை..! ஹூண்டாய்க்கு எதிராக ஒன்று கூடும் இந்தியர்கள்..!

கண்துடைப்பு அறிக்கை..! ஹூண்டாய்க்கு எதிராக ஒன்று கூடும் இந்தியர்கள்..!

7-2-22/10.40 AM

டெல்லி : கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் கடந்த 5 பிப்ரவரி அன்று இந்திய இறையாண்மையை அவமதிக்கும் விதமாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தது. அதையடுத்து இந்தியர்கள் வெகுண்டெழுந்து அந்த நிறுவனத்தை விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

காஷ்மீர் பிரிவினைவாதிகளை நினைவு கூறும் பொருட்டு பாகிஸ்தானால் பிப்ரவரி 5 காஷ்மீர் ஒற்றுமைதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு வாழ்த்து சொன்ன ஹூண்டாய் நிறுவனம் காஷ்மீர் சுதந்திரத்திற்காக பிரிவினைவாதிகள் பின் நிற்போம் என பொருள்படும்படி ட்வீட் செய்திருந்தது.
அதையடுத்து இந்திய நெட்டிசன்கள் ஹூண்டாயை விமர்சிக்க தொடங்கினர்.

`

பின்னர் ஹூண்டாய் நிறுவனம் இந்திய நெட்டிசன்களை ப்ளாக் செய்தது. பிரச்சினை மேலும் பெரிதாகவே ஹூண்டாய் நிறுவனம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “நிறுவனம் 25 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறது” என்கிற ரீதியில் கூறப்பட்டிருக்கிறது.

```
```

அந்த அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் தனது நிலைப்பாட்டை தவறு என சுட்டிக்காட்டவில்லை. இதனால் கொதிப்பான நெட்டிசன்கள் பாய்காட் ஹூண்டாய் என மேலும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

……உங்கள் பீமா