Thursday, June 20, 2024
Home > செய்திகள் > சர்ச்சுகளில் பலகோடி ஊழல்..! மோகன் சி லாசரஸ் ஒப்புதல் வாக்குமூலம்..!

சர்ச்சுகளில் பலகோடி ஊழல்..! மோகன் சி லாசரஸ் ஒப்புதல் வாக்குமூலம்..!

22-1-22/16.20pm

சென்னை : சட்டத்திற்கு புறம்பாக பலகோடி நிதிபெற்றதாக சமீபத்தில் மத்திய அரசு பல மிஷனரி அமைப்புகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. அதே போல சர்ச்சுகளுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் பள்ளிகளில் பலகோடி அளவில் ஊழல் நடைபெறுபவதாக மோகன் சி லாசரஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிறித்தவ ஆராதனை கூட்டம் ஒன்றில் பேசிய நாலுமாவடி பாதர் மோகன் சி லாசரஸ் “சர்ச்சுகளில் ஊழல் மலிந்துவிட்டது. அதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். டயோஸீஸை சேர்ந்த கமிட்டி பொறுப்பாளர் ஒருவருடன் பேசினேன். அவர் என்னிடம் சொல்லும்போது நான் டயோசீஸை சேர்ந்த பள்ளி ஒன்றின் நிர்வாக கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த ஒரு பள்ளியிலேயே வருடத்திற்கு ஒரு கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறினார். அப்போது மக்களே நினைத்து பாருங்கள். எத்தனைகல்லூரிகள் எதனை பள்ளிகளில் இதேபோன்று ஊழல் நடந்திருக்கும். ஒருபள்ளியில் ஒரு வருடத்திற்கு ஒருகோடி எனில் எத்தனை கோடி ஊழல் இத்தனை வருடங்களில் நடந்திருக்கும். அல்லேலூயா சொல்லுங்கள்.

`

சர்ச்சுக்குள்ளேயே ஊழல் சாத்தான் தனது கரத்தை நுழைத்துவிட்டான். இதைமாற்றவேண்டு. அல்லேலூயா சொல்லுங்கள்.” என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.ஏற்கனவே திருநெல்வேலி பாளையங்கோட்டையில் சர்ச்சுக்கு சொந்தமான பள்ளியில் ஏற்பட்ட விபத்தால் நான்கு மாணவர்கள் உயிர்போனது நினைவிருக்கலாம். அங்கு சுற்றுச்சுவர் அனுமதி தொடர்பாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்ததாக செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

```
```

கோவில் நிதியை பொதுசேம நிதி என அரசு எடுத்துக்கொள்வதைப்போல டயோசீஸ் மற்றும் மிஷனரிகளுக்கு சொந்தமான பள்ளி கல்லூரி மற்றும் சர்ச்சுகளில் வரும் வருமானத்தை தமிழக அரசு மக்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா