Friday, March 29, 2024
Home > செய்திகள் > காவிக்கொடியை ஏந்தும் திமுக..! சீமான் விமர்சனம்

காவிக்கொடியை ஏந்தும் திமுக..! சீமான் விமர்சனம்

28-12-21/16.01pm

சென்னை : கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக அமைச்சர் ஆர்.எஸ் பாரதி மோடி எங்களுக்கு எதிரியல்ல. நாங்கள் கறுப்புக்கொடி காண்பிக்க மாட்டோம். அவர் எங்கள் விருந்தாளி என கூறினார்.

தமிழகத்தில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள 11 மருத்துவக்க கல்லூரிகளை திறந்து வைக்க வருகிற ஜனவரி 12 அன்று மதுரைக்கு விஜயம் செய்கிறார் பாரத பிரதமர் மோடி. அவர் தமிழகம் வரும்போதெல்லாம் கறுப்புக்கொடி காண்பிப்பது திமுக மற்றும் அதன் தோழமைகட்சிகளே. இந்த முறை திமுக ஆளும் கட்சியாக இருந்து பிரதமரை வரவேற்பதால் அந்த கொடி காட்டுதல் நிகழ்ச்சி நடைபெறாது என திமுகவினரே கூறுகின்றனர்.

`

ஆர்.எஸ்.பாரதியின் பேட்டிக்கு பதிலளித்த சீமான் “ஆட்சிக்கு வருமுன் கோ பேக் மோடி என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம். அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி என்கிறார்கள். அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி.

```
```

பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை” என விமர்சித்துள்ளார்.

…ஸ்டீபன் தங்கதுரை