நடிகர் சோனு சூட் வீடு அவரது ஹோட்டல் மற்றும் அவருக்கு சொந்தமான 6 இடங்களில் நேற்று முதல் தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இவர் நடத்திவரும் NGO அறக்கட்டளையான சூட் பவுண்டேசன் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தெரிகிறது.
கொரோனா காலங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு இவர் உதவியிருந்தாலும் முறையற்ற பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதியான மலப்புரத்தில் தொலைபேசி சேவைக்காக தனது அறக்கட்டளை மூலம் பல இடங்களில் தொலைபேசி டவர்கள் அமைத்து கொடுத்ததாக தெரிகிறது.
அப்போதே இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தது. மேலும் ஆம் ஆத்மீ தலைவர்கள் சிலரின் கணக்கில் காட்டப்படாத முறைகேடான நிதி இந்த அறக்கட்டளை மூலமாக மாற்றப்படுகிறது என செய்திகள் உலவுகின்றன. அதை உறுதி செய்வது போல ஆம் ஆத்மி கட்சியில் சோனு சூட் இணையப்போகிறார் என செய்திகள் வெளிவந்தன.
அதை மறுத்த சோனு அப்படி ஒரு எண்ணம் இல்லை என தெரிவித்தார். ஆனால் தற்போது ஆம் ஆத்மீயில் இணையப்பபோவதை சூசகமாக தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தெளிவான அறிக்கை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் விடுமுறைக்காக வெளிமாநிலம் சென்றபோது சோனுவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிகின்றன.
…உங்கள் பீமா