அருணாச்சல பிரதேச மாநில தலைநகரான இட்டாநகரில் அமைந்துள்ள ஒரு அரசுக்கல்லூரியில் பணியில் இருக்கும் விரிவுரையாளர்களால் பழங்குடியின மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இட்டாநகரில் அமைந்துள்ளது டேரா நடுங் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1979 ல் மாநில அரசால் பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கல்விமேம்பாட்டுக்காக டேரா நடுங் கல்லூரி உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு பணிபுரியும் சில ஆசிரியர்கள் சட்டத்துக்கு புறம்பாக கல்லூரிக்கு படிக்க வரும் மாணவர்களை மதம் மாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
சில ஆசிரியர்கள் பழங்குடியின மாணவர்களின் மனதை மாற்றி கிறித்துவத்திற்கு மதம் மாற வற்புறுத்துகின்றனர். ஞான ஸ்நானம் செய்து வைக்க கல்லூரி வளாகத்தில் உள்ள நீர்நிலை தொட்டிகளை பயன்படுத்துகின்றனர். இதில் இட்டாநகரில் செயல்படும் மினிஸ்ட்ரிஸ் ஆப் கிறிஸ்ட் செங்கி பார்க் எனும் திருச்சபையின் தலையீடும் இருப்பதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.
மேலும் அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு பயில வரும் மாணவர்களை மாற்றலாமா அரசு இதை அனுமதிக்கிறதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.