27-11-21/17.11pm
டெல்லி : சமூக வலைத்தளங்களில் MILORDS என ட்ரெண்டாகி வருகிறது. நேற்று அரசியலமைப்பு நாளை ஒட்டி பேசிய CJI ரமணா சமூக வலைத்தளங்களை பற்றி குறிப்பிட்டார்.
டெல்லியில் நேற்று அரசியலமைப்பு நாளையொட்டி நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமை தாங்கினார். அதில் பேசிய CJI ரமணா ” சட்டத்துறையும் நீதிபதிகளும் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்படுகிறார்கள். நீதிபதிகளுக்கெதிரான உள்நோக்கத்தோடு கூடிய நிதி உதவி செய்யப்பட்ட ட்ரோல்கள் அதிகமாக சுற்றி வருகின்றன.
மத்திய உளவு அமைப்புகள் இதை கவனித்துக் கொள்ளவேண்டும். நீதிபதிகள் அரசியலமைப்பின் ஒரு அங்கம். மேலும் நீதிபதிகள் மீதான தாக்குதல்கள் உடல்ரீதியாகவும் மனா ரீதியாகவும் கட்டமைக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் மாண்பையும் நீதிபதிகளின் உணர்வுகள் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது” என தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று முதல் #MILORDS என நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் ” சில கடினமான காரணங்களை கொண்டு மேற்குவங்க தேர்தல் கலவர வழக்கிலிருந்து விலகுகிறேன்” என கூறிய நீதிபதியை குறிப்பிட்டு இதுவா சட்டத்துறை என கேள்வியெழுப்பியுள்ளார்.
மற்றொருவர் oralsex போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என நீதிபதி அளித்த தீர்ப்பை குறிப்பிட்டு கேள்வியெழுப்பியிருக்கிறார். நான்கு கோடிக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சாதாரண வழக்கிலெல்லாம் தானாக முன்வந்து மூக்கை நுழைக்கிறீர்களே என ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
….உங்கள் பீமா