Friday, September 22, 2023
Home > அரசியல் > வைரலான வீடியோ..! திமுக அமைச்சரை மன்னிப்பு கேட்க வைத்த நெட்டிசன்கள்..!

வைரலான வீடியோ..! திமுக அமைச்சரை மன்னிப்பு கேட்க வைத்த நெட்டிசன்கள்..!

27-11-21/18.06pm

சென்னை : திமுக அமைச்சர்கள் பொதுமக்களை மட்டுமல்லாமல் சக கூட்டணி தலைவர்களையும் ஒருமையில் பேசி அவமதிப்பாக நடந்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் கேஎன் நேருவிடம் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு “அதுதான் அங்க ஒருத்தன் இருக்கானே. வெங்கடேசன் எம்பி இருக்கான்ல அவன்கிட்ட கேளுங்க” என ஒருமையில் பேசினார்.

அதையடுத்து நெட்டிசன்கள் கம்யூனிஸ்ட்டை சேர்ந்தவர்களிடம் ரோஷம் இல்லையா மானத்தை அடகு வைத்துவிட்டீர்களா என பலவாறு கேள்வியெழுப்பி பதிவிட்டு வந்தனர். மேலும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தலைவர்களையும் டேக் செய்து கிண்டலடித்து வந்தனர். இது திமுக மற்றும் கம்யூனிஸ்ட் இடையே மோதல் உருவாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.

`

அதையடுத்து அறிவாலயத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையின் பெயரில் அமைச்சர் நேரு வெங்கடேசன் எம்பியிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். அவர் தனது பதிவில் “பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் இந்த அடாவடியான பேச்சுக்களையும் செயல்களையும் தவிர்த்துக் கொண்டால் மக்களிடம் நன்மதிப்பை பெறமுடியும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் நேருவின் வீடியோவை அதிக அளவில் பதிவிட்டு பரப்பியது பிஜேபியினர்தான் என கிசுகிசுக்கப்படுகிறது.

….உங்கள் பீமா