Monday, December 2, 2024
Home > செய்திகள் > விநாயகர் சதுர்த்தி நடத்தப்பட்டால் கிறித்தவ ஜெப ஊர்வலமும் நடத்தப்படும் என்று கூறிய கல்லூரி தாளாளர் கைது..!

விநாயகர் சதுர்த்தி நடத்தப்பட்டால் கிறித்தவ ஜெப ஊர்வலமும் நடத்தப்படும் என்று கூறிய கல்லூரி தாளாளர் கைது..!

கோயம்புத்தூரில் இயங்கிவரும் செயின்ட் பால் பெண்கள் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியின் சேர்மன் மற்றும் ட்ரஸ்டியான டேவிட் என்பவர் கடந்த 16-8-21 அன்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு நோட்டீஸ் அச்சடித்து விளம்பரம் செய்திருந்தார்.

அதில் “கடந்த மூன்றுவருடமாக காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கோயம்புத்தூர் நகரம் இருந்ததால் தான் விக்கிரக ஆராதனைகள் குறைந்தது. மேலும் நம்முடைய மூன்று வருட பிரார்த்தனைகள் நிறைவேறியது. இந்த வருடமும் விநாயக விக்கிரக வழிபாடுகள் நடக்காமல் இருக்க உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் வேண்டும்” என குறிப்பிட்டிருந்ததோடு சில சர்ச்சை கருத்துகளும் இடம்பெற்றிருந்தது.

`

இதையடுத்து இந்து மக்கள் கட்சி சார்பிலும் இந்து அமைப்புகள் சார்பிலும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று டேவிட் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பள்ளி கல்லூரி நிர்வாகி மத மோதல் உருவாகும் விதத்தில் இந்தவிதமான செயலில் ஈடுபட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

```
```

இவரது பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியரின் எதிர்காலம் எப்படி சிறந்த முறையில் இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

…..உங்கள் பீமா