Thursday, March 28, 2024
Home > செய்திகள் > அனுமதியில்லாமல் தொழுகை நடத்ததடை..! சவூதி அரசு அதிரடி..!!

அனுமதியில்லாமல் தொழுகை நடத்ததடை..! சவூதி அரசு அதிரடி..!!

ஆப்கனை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதிலிருந்து இந்தியாவை தவிர அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. அந்த வகையில் சவூதி அரேபிய அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பள்ளிவாசல் நிர்வாகிகள் இமாம் மற்றும் ப்ரீச்சர்ஸ் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லடிப் ஷேக் அனுப்பியுள்ளார். அதில் “இஸ்லாமிய நூலகங்களில் வைக்கப்படும் நூல்கள் அரசின் அனுமதிபெற்றே வைக்கப்பட வேண்டும். மதஉணர்வை தூண்டும் விதமாகவோ அல்லது சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கருத்துக்கள் உள்ள புத்தகங்களோ வைக்க தடை விதிக்கப்படுகிறது. எக்ஸ்ட்ரீமிசத்தை போதிக்கும் நூல்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

`

மேலும் இஸ்லாமை போற்றுகிறோம் என கூட்டம் சேர்த்து தொழுகை நடத்த கூடாது. அரசின் அனுமதிபெற்ற பின்னரே தொழுகை நடத்த வேண்டும். ஷரியா சட்டம் என்றால் என்ன என்பதை சரிவர புரிந்து கொள்ளவேண்டும். இமாம்கள் மற்றும் ஆசிரியர்கள் ஷரியா சட்டங்களில் சொல்லப்பட்ட நல்ல கருத்துக்களை மட்டுமே போதிக்க வேண்டும்.

```
```

அனைத்து இமாம்கள் மற்றும் பள்ளிவாசல் ஊழியர்கள் அறிவுசார்ந்த ஆரோக்கியமான அறிவியல் சார்ந்த அரசின் பாட வகுப்புகளில் மற்றும் அதற்கான கோர்ஸ்களில் சேர்ந்து அறிவியில் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.