5-12-21/12.52PM
விருத்தாசலம் : பிசிஆர் சட்டத்தை பலர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக சமீபகாலமாக பலர் குரலெழுப்பி வருகின்றனர். அதை நிரூபிப்பது போல பல சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் மற்றொருவருடைய சமூகத்தையோ அல்லது அவர் சார்ந்திருக்கும் பிரிவையோ கொச்சைப்படுத்துவது அல்லது அவதூறாக பேசுவது குற்றம் என கருதப்படுகிறது. ஆனால் பிராமணர் மற்றும் சில பிரிவுகளை தொடர்ந்து தமிழகத்தில் இழிவு படுத்தி கொச்சைப்படுத்தி அவதூறாக பேசி என்ன செய்தாலும் அமைதியாக இருக்கும் சட்டம் ஒரு பிரிவினருக்கு மட்டும் அதிகபடியான சலுகைகளை வழங்கியிருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றசாட்டை எழுப்பிவருகின்றனர்.
இப்படி ஒருதலைப்பட்சமாக இருக்கும் சட்டத்தால் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமை சீர்கெடுவதாகவும் குறைகூறுகின்றனர். மேலும் பிசிஆர் சட்டத்தால் சில நன்மைகள் ஏற்படினும் பல இடர்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கிறது. இதை மையமாக கொண்டு சமீபத்தில் ஒரு திரைப்படம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த பிசிஆர் சட்டத்தால் பொய்யான வழக்கு போடப்பட்டு அதனால் விஷமருந்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் ” ஒரு பெண்ணை சீண்டிய இளைஞர்களை தட்டிக்கேட்ட என்னை பொய்யாக பிசிஆர் வழக்கு பதிந்து சிறையில் தள்ளிவிட்டனர். நான் சாக போகிறேன். அவர்கள் யாரையும் சும்மா விடாதீர்கள்” என அழுதுகொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனால் விருத்தாசலம் பகுதியே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.
…. உங்கள் பீமா