Saturday, January 25, 2025
Home > செய்திகள் > ஹிந்தியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு..! பொங்கி எழுந்த முதல்வர் முக ஸ்டாலின்..?

ஹிந்தியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு..! பொங்கி எழுந்த முதல்வர் முக ஸ்டாலின்..?

27-11-21/13.33pm

சென்னை : ஹிந்தியில் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் தமிழக முதல்வர் விளக்கம் கேட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் பல முன்னேறிய நாடுகளில் ஒரே மொழி ஒரே நாடு என்ற கொள்கை மேலோங்கி நிற்கிறது. ஓர் நாட்டின் வளர்ச்சிக்கு மொழியின் பங்களிப்பு மிக மிக இன்றியமையாதது. தமிழகத்தை பொறுத்தவரை அரசியல்வாதிகள் நடிகர்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்கள் ஹிந்தியில் புலமை பெற்றவர்களாகவும் மற்றும் அவர்கள் நடத்தும் பள்ளிகள் அனைத்திலும் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கும்.

நடிகர்கள் நடிகைகள் பிழைப்புக்காக ஹிந்தி கற்றுக் கொண்டு ஹிந்தியில் சரளமாக பேசும்போது ஏழை எளிய சாதாரண மக்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் இந்தி கற்கவோ பேசவோ தமிழகத்தில் அதிகாரபூர்வமில்லாத தடை நிலவி வருகிறது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்படம் என்பது பலரும் அறியாத ஒன்று.

`

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை விவகாரங்கள் குறித்து மாநில டிஜிபிக்கள் மாநாடு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இந்த 56ஆவது டிஜிபிக்கள் மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் டிஜிபிக்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு மாநாட்டில் இந்தியில் பேசினார். அது தற்போது திமுக அரசால் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் முக ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டதும் அவர் டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் அழைத்திருக்கிறார். பின்னர் இந்தியில் பேசியதற்கு விளக்கம் கேட்டிருக்கிறார்.

```
```

மேலும் ஹிந்தியில் எதற்கு பேசினீர்கள் என கோபப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு உயர் அதிகாரி இந்தியில் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாத முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப்பாடமாக்குவது ஏன் என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

…..உங்கள் பீமா