10-12-21/16.00pm
இந்தியா : இணையத்தில் திடீரென ராகுல் காந்தி கோ பேக் என ட்ரெண்டாகி வருகிறது. ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்தும், முதல்வர் அசோக் கெலாட் ஊழலை எதிர்த்தும் இணையவாசிகள் கோபேக் ராகுல் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மற்றும் மருத்துவ மனையில் சிகிச்சையளிக்க வசதியில்லாமல் இறந்தவர்களுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணித்தவர்களுக்கும் மத்திய அரசு ஒருவருக்கு தலா ஐம்பதாயிரம் வழங்கவேண்டும் என ராகுல் கோரிக்கை எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ராகுலை கடுமையாக கடிந்து கொண்டனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இறப்பு விகித்யம் மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருந்ததாகவும் மருத்துவமனைகளில் சரியான வசதிகள் செய்து தரப்படவில்லையென்றும் நீதிபதிகள் ராகுலை கடிந்து கொண்டனர்.
மேலும் ராஜஸ்தானில் ரீட் தேர்வு மற்றும் நீட் தேர்வுக்கான வினாத்தாள்களை காங்கிரஸ் பிரமுகர் ஒருவரே விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் அந்த பிரமுகரை தப்ப வைக்க வழக்கை திசை திருப்பியதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்துத்வா என்பது இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மக்களை அளிக்க கூடியது என கூறி ராகுல் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
இதனிடையே நாளை ராகுல் ராஜஸ்தான் செல்வதாக சொல்லப்படுகிறது. இதனால் கொந்தளித்த இணையவாசிகள் கோ பேக் ராகுல் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா