10-12-21/14.00pm
சென்னை : தமிழக அரசியல் தற்போது சூடுபிடித்துள்ளது. அடுத்தடுத்த பிஜேபியினர் மற்றும் பிஜேபி ஆதரவாளர்கள் கைதால் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை சற்றே கொந்தளித்துள்ளார். கருத்துக்களை கூற தமிழகத்தில் உரிமையில்லையா. கருத்து சுதந்திரம் எங்கே போனது என கொந்தளித்துள்ளார்.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இதுவரை பிஜேபியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று எழுத்தாளர் மாரிதாஸ் எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஆவணங்கள் எதுவுமின்றி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து தமிழக பிஜேபி தலைவர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “தன்னுடைய அதிகார மமதையினால் அறிவாலயம் விமர்சனம் செய்பவர்களுக்கு விலங்கு பூட்டுகிறது. திமுக அரசால் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்ட பிஜேபி உறுப்பினர் திரு. கல்யாண் ராமன் மற்றும் பிற தேசியவாதிகளுக்கு சட்டப்பூர்வ தீர்வுகளை, உதவிகளை தமிழக பாஜக செய்து வருகிறது. சட்ட உத்தரவாத கருத்துச் சுதந்திரத்தை கடுமையாக மீறி பழிவாங்க திரு.மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க தமிழக பிஜேபி போராடும். அனைவருக்கும் சட்ட மற்றும் இதர உதவிகளையும் தமிழ்நாடு பிஜேபி கட்சி முன்நின்று செய்யும்” என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முக ஸ்டாலினை ஒருமையிலும் தரம் தாழ்ந்தும் விமர்சிக்கும்போது அவர்களை ஏன் காவல்துறை கைது செய்ய தயங்குகிறது என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
….உங்கள் பீமா