11-12-21/8.50am
ஹரியானா : பொது இடங்களில் தொழுகை நடத்த தடை விதித்து ஹரியானா முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலை தவிர்த்து பொது இடங்களிலும் போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் தொடர்ந்து தொழுகை நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் கோவில்கள் அருகேயும் தொழுகை நடத்தியதால் பொதுமக்கள் திரண்டு அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
குருகிராம் பகுதியில் போக்குவரத்து சாலையை மறித்து தொழுகையில் ஈடுபட்டதால் மற்றொரு பிரிவினர் அந்த இடத்தில் ஒன்று கூடி ஹனுமான் சாலிசா பாடினர். இதையடுத்தது காவல்துறையினர் தடியடி நடத்தி ஹனுமான் சாலிசா பாடியவர்களை விரட்டியடித்தனர். இது மாநிலத்தில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதை உணர்ந்த மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் அதில் இனி பொது இடங்களில் தொழுகை நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கு இஸ்லாமிய பத்திரிக்கை நிருபர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த தனியாக மசூதிகள் அரசு சார்பில் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை எழுப்புகின்றனர். இதற்க்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர் ” தாராளமாக மசூதிகள் கட்டித்தரலாம். ஆனால் கோவில்கள் போல அரசே ஏற்று நடத்தும். கோவில்களில் உள்ள கட்டுப்பாடுகள் போல மசூதிகளிலும் இருக்கும்” என கூறியுள்ளார்.
மேலும் குர்ஆனில் உமர் குறிப்பிடுகையில் ” இறை தூதர் ஏழு இடங்களில் தொழுகை நடத்துவதை அனுமதிப்பதில்லை. கழிவறை, குளியலறை , ஒட்டகங்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து இடங்கள், குப்பை கொட்டும் இடங்கள், இறைச்சி வெட்டும் இடங்களில் தொழுகை நடத்த அனுமதியில்லை” என சாப்டர் 6 ஹதீத் நம்பர் 746ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரானின் கருத்துக்களை உண்மையான இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டு பொதுப்போக்குவரத்துக்கு இடைஞ்சல் கொடுக்கமாட்டார்கள் என நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார். முதல்வர் கட்டாரின் அறிவிப்புக்கு இஸ்லாமியர்கள் பலர் ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா