Monday, February 10, 2025
Home > செய்திகள் > பிஜேபி நிர்வாகி அதிரடி கைது..! காவல்துறை சமூக ஊடக மையத்திற்கு முதல் சமர்பிப்பு..! பி.டி.ஆர்

பிஜேபி நிர்வாகி அதிரடி கைது..! காவல்துறை சமூக ஊடக மையத்திற்கு முதல் சமர்பிப்பு..! பி.டி.ஆர்

29-3-22/15.04PM

சென்னை : கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டார். அவருடன் உதயநிதி, துர்கா ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் மற்றும் செந்தாமரை சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை விமர்சித்து பதிவிட்டதாக கூறி அருள் பிரசாத் என்பவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

முக ஸ்டாலின் துபாய் பயணத்தின்போது அணிந்த கோட் வைரலானது. மேலும் துபாய் செல்கையில் அவர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என நிதியமைச்சர் கூறியதாக தவறான தகவல் இணையத்தில் பரவியது. பி..பழனிவேல்ராஜன் தனது ட்விட்டரில் “தமிழக காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பணமாக இருக்கலாம்.

`

சங்கிகள் வாட்ஸப்பை தாண்டி செல்லக்கூடாது” என பதிவிட்டிருந்தார். இதையடுத்து எடப்பாடி நகர திமுக நகரத்துணை அமைப்பாளர் பாலசுப்ரமணியம் என்பவர் எடப்பாடி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரில் “பிஜேபி சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் அருள்பிரசாத் என்பவர் மார்ச் 26 அன்று தனது சமூகவலைத்தளத்தில் முக ஸ்டாலின் அணிந்திருக்கும் கூலிங் ஜாக்கெட்டின் விலை 17 கோடி என பொய்யான தகவலை பதிவிட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்திருந்தார்.

```
```

முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதிரடியாக கைதுசெய்துள்ளது. பரதபிரதமர் மோடி தைவான் காளான் சாப்பிடுகிறார். பேனாவின் விலை பலலட்சம், அணிந்திருக்கும் கோட் பல கோடி என வதந்தி பரப்பியவர்களையும் பிரதமரை ஆபாசமாக பேசியவர்களையும் கொலை மிரட்டல் விடுத்தவர்களையும் கண்டுகொள்ளாத காவல்துறை அருள் மீது அவசர நடவடிக்கை எடுத்தது ஏன் என பிஜேபியினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

…..உங்கள் பீமா