Thursday, March 28, 2024
Home > செய்திகள் > பள்ளிக்கல்வித்துறை அதிரடி..! கதறும் நெட்டிசன்கள்..!

பள்ளிக்கல்வித்துறை அதிரடி..! கதறும் நெட்டிசன்கள்..!

18-3-22/10.57am

குஜராத் : மாநில பள்ளிக்கல்வித்துறை நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-23 கல்வியாண்டில் ஹிந்துக்களின் புனித நூல்களுள் ஒன்றான ஸ்ரீமத் பகவத்கீதை பள்ளிபாடபுத்தகத்தில் இடம்பெறுகிறது.

குஜராத் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஜித்து வஹானி கூறுகையில் ” இந்திய காலச்சாரத்தையும் புராணகாலத்தின் அறிவுச்செழுமையையும் எடுத்துரைக்கும் விதமாக நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 12 வகுப்புவரையிலான பாடப்புத்தகங்களில் புனித நூலான பகவத்கீதையின் சாராம்சங்கள் இடம்பெறும். ஸ்லோகங்கள் மற்றும் கீதையில் இடம்பெற்றுள்ள சாராம்சங்கள் பள்ளிகளில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளாக இடம்பெறும்.

கீதையில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்துக்களும் பள்ளி ப்ரேயரில் இடம்பெறும். இது புதியக்கல்வித்துறையில் செய்யப்பட்டுள்ள மாபெரும் மாற்றமாகும். இதனால் கல்வித்துறை வளர்ச்சிபெறும்” என குறிப்பிட்டார். மேலும் மத்தியப்பிரதேசத்தில் பொறியியல் கல்லூரிகளில் NEP கொள்கைப்படி ராமாயணம் மகாபாரதம் ஆகிய ஹிந்து புனிதநூல்கள் 2020லேயே இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணுவ அகாடமியில் பகவத் கீதை இடம்பெற்றிருப்பது நினைவுகூரத்தக்கது.

`

இந்த அறிவிப்பிற்கு கலவையான விமர்சனங்கள் சமூகவலைத்தளத்தில் பரவிவருகின்றன.

```
```

ஹிஜாப்பை மத அடையாளம் என்று ஒதுக்கும் அரசு மத அடையாளமான பகவத்கீதையை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என பதிவிட்டுவருகின்றனர்.

….உங்கள் பீமா