6-5-22/11.53AM
கர்நாடகா : தங்களை சிறுபான்மையினர் என கூறிக்கொள்ளும் ஒரு கும்பல் தங்களது கிராமம் ஒரு மினி பாகிஸ்தான் என கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈத் பண்டிகையன்று தொழுகை நடத்த ஒன்று சேர்ந்த ஒரு கும்பல் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நஞ்சன்கூடு தாலுகாவில் அமைந்துள்ள காவலண்டே கிராமத்தில் ஈத் பண்டிகையன்று ஒன்று கூடிய கும்பல் பொதுவழிகளை ஆக்கிரமித்து தொழுகை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த கும்பல் அல்லாஹு அக்பர் என்றும் நாரா ஏ தக்பிர் என்றும் கோஷங்களை எழுப்பியது.
அங்கிருந்த போலீசார் கூட்டத்தை கலையுமாறு கேட்டுக்கொண்டும் அவர்கள் கேட்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த கூட்டத்தில் உள்ள நபர் “எங்கள் கிராமத்தில் கூடியிருக்கும் கூட்டத்தை பாருங்கள்” என கூற மற்றொரு நபர் இது மினி பாகிஸ்தான் என கூறியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கவலண்டே என்றால் மினி பாகிஸ்தான் என்று அர்த்தமாகும் எனவும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பசவராஜ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதுகுறித்து அவர் “நஞ்சன்கூடு காவல் கண்காணிப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து ஆய்வுசெய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
….உங்கள் பீமா