Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > உக்ரைன் மாணவர்களை அலைக்கழிக்கிறதா இந்திய அரசு..! கட்டவிழ்க்கப்படும் பொய்கள்..!

உக்ரைன் மாணவர்களை அலைக்கழிக்கிறதா இந்திய அரசு..! கட்டவிழ்க்கப்படும் பொய்கள்..!

3-3-22/15.58pm

சென்னை : உக்ரைன் ரஷ்யா போரில் உலகநாடுகள் அமைதிகாக்க இந்தியாவில் இந்த பிரச்சினையை அரசியலாக்கி அழகுபார்க்கிறது எதிர்க்கட்சிகள். இந்திய வெளியுறவுத்துறை போருக்கு சில வாரங்களுக்கு முன்னரே உக்ரைன் வாழ் இந்தியர்களை எச்சரித்திருந்தது.

அவர்களுக்காக பல முன்னேற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் வெகுசிலரே அந்த சேவையை பயன்படுத்திக்கொண்டனர். நேற்று முன்தினம் கேரளாவை சேர்ந்த ஒரு மாணவர் தனது வளர்ப்பு நாய் இல்லாமல் இந்தியா வர விரும்பவில்லை என வீடியோ வெளியிட்டிருந்தார். சமாஜ்வாடி தலைவர் ஒருவரின் மகள் வெளியிட்ட வீடியோவில்,

” மும்பை விமான நிலையத்தில் என்னை அம்போ என விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அங்கிருந்து 234 ரூபாய் செலவழித்து நான் வாடகை காரில் சென்றேன்” என உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் சிலர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய நகைப்புக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைன் வாழ் இந்தியர்களை 1000 கிலோமீட்டர் நடந்தாவது வெளியேறுங்கள் என கூறியதாக தவறான தகவலை பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தவறான தகவலை பரப்பிவருகிறார்.

`

மேலும் பல செய்திநிறுவனங்களும் இதை ஒளிபரப்பியுள்ளது. ஆனால் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பேருந்துகள் வாகனங்கள் ரயில் வசதி இல்லாத பட்சத்தில் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிஸோஷினுக்கு நடந்தாவது வாருங்கள்” என குறிப்பிட்டுள்ளது.

```
```

ஆனால் இதை திரித்து ஜோதிமணி செய்தி வெளியிடுவதாக பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

……உங்கள் பீமா