Saturday, October 5, 2024
Home > அரசியல் > வெளிவந்த உடன்பிறப்புகளின் 200ரூபாய் ரகசியம்..! போட்டுடைத்த ஆங்கில செய்தி நிறுவனம்..!

வெளிவந்த உடன்பிறப்புகளின் 200ரூபாய் ரகசியம்..! போட்டுடைத்த ஆங்கில செய்தி நிறுவனம்..!

30-11-21/11.08am

சென்னை : ஆங்கில நாளேடு நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் திமுகவின் தில்லுமுல்லு வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் உடன்பிறப்புகளின் 200 ரூபாய் ரகசியம் வெளிப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் அமர என்னென்ன உள்ளடி வேலைகள் செய்திருக்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் ஸ்டிங்க் ஆபரேஷன் நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக தனியார் அமைப்பை அணுகியிருக்கிறது. அவர்கள் மூலம் அதிமுக ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை தினமும் சமூக வலைத்தளங்களில் பதிவிட சொல்லியிருக்கிறது.

சமூக வலைதளத்தில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் ரூபாய் நூறு வீதம் வழங்கியிருக்கிறது. சிறப்பாக செயல்பட்டு தினமும் அதிமுக ஆட்சியை பற்றி அவதூறாக பதிவிடுபவருக்கு ரூ இருநூறு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பதிவிற்கான கருப்பொருளை அந்த நிறுவனமே வழங்கியிருக்கிறது. இதை பதிவிடுவது மட்டுமே அந்த தனிப்பட்ட நபரின் வேலை.

`

மேலும் தனக்கு தெரிந்த நபர்களையும் அதிர் சேர்த்துவிட்டு தனியாக கமிஷனும் பெற்றுக் கொள்ளலாம். பதிவிடும் நபரின் வாங்கிக் கணக்கிற்கு ரூ 200 வந்துவிடும். இதையறிந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவர் நேரடியாக களத்தில் இறங்கி இதுகுறித்து விசாரிக்க மும்பையை சேர்ந்த அந்த நிறுவனம் அந்த நிருபரிடமே பேரம் பேசியிருக்கிறது.

```
```

அதையடுத்து சம்பந்தப்பட்ட நிருபர் பேசுவதை தனது போனில் பதிவு செய்து கொண்டு அதை பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி கூட வெளியே வராமல் பார்த்துக் கொண்டது திமுகவின் புத்திசாலித்தனம். மேலும் அதிமுக ஆட்சியை பற்றி அவதூறாக பேசவே தனியாக சமூக வலைதள பதிவர்களை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக இனி மக்களுக்கு என்ன நல்லது செய்யப்போகிறது என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

…உங்கள் பீமா