Tuesday, May 19, 2026
Home > அரசியல் > ஒரே நாடு ஒரே தேர்தல்..! கதறும் எதிர்கட்சிகள்..!

ஒரே நாடு ஒரே தேர்தல்..! கதறும் எதிர்கட்சிகள்..!

சமிபத்தில் நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி குடியரசு தின தனது உரையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஆக்கப்பூர்வமான விஷயத்தை சிந்திக்க வேண்டும் என்றும் இதை அமல்படுத்த அனைத்து கட்சிகளும் இணைந்து முன்வரவேண்டும் என்று பேசியுள்ளார். இதில் பல சாதக பாதக விஷயங்கள் அடங்கியுள்ளன. பல கட்சிகள் பல விதமான கருத்துக்களை முன் வைத்துள்ளது. சிலர் இது ஆலும் கட்சிக்கே சாதகமான இருக்கும் என்றும் பிராந்திய கட்சிகள் வலுவிழக்கச் செய்யும் என்றும் கூறி வருகின்றனர். ஆளும் கட்சியை பொருத்தவரை இது தேசத்திற்கு பல வகையில் நன்மை பயக்கும் என்பது அவர்களின் கருத்து.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரே சமயத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் முறை ஆகும். ஒரே சமயத்தில் இரண்டு ஓட்டுகள் மக்கள் பதிவிட வேண்டும். இதனால் தேர்தல் ஆணையத்தின் வேலை சுலபமாக இருக்கும் என்றும் தேர்தலுக்கான வேலைகள், பாதுகாப்பு வசதிகள் முகவர்கள் அமைப்பது போன்ற விஷயங்கள் எளிதாக செய்ய முடியும் என்று கருதப்படுகிறது.

நம் நாடு இது போன்ற தேர்தல்களை 1952 மற்றும் 1957 காலகட்டத்தில் சாத்தியப்படுத்துள்ளது. 1959 கேரள அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டபோதும் 1967 மற்றும் 1969 ஜன சங்கம் ஆட்சி கவிழ்ந்தாலும் புதிய மாநிலத்தில் உருவாக்கப்பட்டதாளும் இந்த முறை மாற்றம் கண்டது.

2019 பாராளுமன்ற தேர்தலுக்கு 55,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அதே போல் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.கா மற்றும் பல முன்னணி எழுத்தாளர்களில் கருத்து இது தேசத்திற்கு பல நன்மைகளை தரும் என்றும் குறிப்பாக தேர்தலுக்கான செலவுகள் பல மடங்கு குறையும் என்றும், பாரா மிலிட்டரி ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்க ஏதுவானதாக இருக்கும் என்றும், புதிய பெயர் சேர்க்க, நீட்க மற்றும் வாடு மாற்றம் போன்ற வேலைகளை எளிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.

மிக முக்கியமான மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள், முக்கிய அம்ச முடிவுகள், பொருளாதார வளர்ச்சி மீதான முடிவுகள் மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் செயல்படுத்த முடியும் என்றும் பிராந்திய தேர்தல்களுக்காக முக்கிய அம்சங்களை தள்ளி போட அவசியம் இருக்காது என்றும் கூறிவருகின்றனர்.

எதிர் கட்சிகள் மற்றும் திமுக போன்ற பிராந்திய கட்சிகள் இது மாநிலத்தின் பிரச்சினையை மறைக்கப்படும் என்றும், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு செயல் படுத்தாது என்றும் தேசிய கட்சிகள் வலு பெற்று பிராந்திய கட்சிகளை வலுவிழக்கச் செய்யும் என்றும் கூறுகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சி இது ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்தை சீர்குலைக்கும் என்ற வகையில் கருதுகின்றனர். அதே போல் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தினால் அது தேச பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

நம்மை பொருத்தவரை எது தேசத்திற்கும் மக்களுக்கு நன்மை பயக்குமே அதை காலம் தாழ்த்தாமல் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுத்த முன்வரவேண்டும். ஒரு சில மாநிலத்துக்கோ ஒரு சில சில்லறை கட்சிகளுக்கோ பாதகம் என்பதால் நிருத்தி வைப்பது தவறு. மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இது போன்ற நல்ல திட்டங்களை துணிச்சலாக செயல்படுத்த வேண்டும்.

நங்கநல்லூர் சௌந்தரராஜன்