Friday, April 18, 2025
Home > அரசியல் > கம்யூனிஸ்ட்டு எம்பியின் பொய்யை சுட்டிக்காட்டிய முதல்வர் முக ஸ்டாலின்..!?

கம்யூனிஸ்ட்டு எம்பியின் பொய்யை சுட்டிக்காட்டிய முதல்வர் முக ஸ்டாலின்..!?

22-1-22/11.30am

சென்னை : மதுரை கம்யூனிஸ்ட் எம்பியான சு.வெங்கடேசன் மதுரை விமானநிலையம் பன்னாட்டு விமானநிலையமாக மாற்றப்படவில்லை என்றும். மத்திய பிஜேபி அனுமதி தரமறுக்கிறது என்றும் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெங்கடேசன் போட்டிருந்த ட்வீட் ஒன்றில் ‘மதுரைக்கு அதிகமான தகுதியும் தேவையும் இருக்கும்போது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மறுப்பது ஏன்” என கேள்வியெழுப்பியிருந்தார்.

`

ஆனால் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் “மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக 120 கோடி செலவில் மாற்றினோம்.புதிய டெர்மினல் கட்டிடங்களுக்கு திமுக ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டபட்டது” என தெரிவித்துள்ளார். முதல்வர் சொல்வது முரணான செய்தியா அல்லது சு. வெங்கடேசன் எம்பி மக்களை ஏமாற்றும் முயற்சியில் பொய் சொல்கிறாரா என பிஜேபியினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

```
```

இதுகுறித்து பிஜேபி தலைவர் ராம ஸ்ரீனிவாசன் எம்பி வெங்கடேசனுடன் என்னய்யா மனக்குறை உங்களுக்கு என கேள்வியெழுப்பியுள்ளார்.

…..உங்கள் பீமா