Friday, March 29, 2024
Home > செய்திகள் > மக்களின் பாதுகாப்போடு சமரசம் செய்கிறதா பிஜேபி..? மீண்டும் 1985..?

மக்களின் பாதுகாப்போடு சமரசம் செய்கிறதா பிஜேபி..? மீண்டும் 1985..?

15-3-22/9.23am

புதுடில்லி : மத்திய விமானபோக்குவரத்துத்துறை அமைச்சகம் நேற்று மாலை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சீக்கியர்கள் கிர்பான் கத்தியை உள்நாட்டு விமானங்களில் பயணிக்கையில் எடுத்துச்செல்லலாம் கூறியுள்ளது.

23 ஜூன் 1985 கனடா டொரோண்டோவில் இருந்து லண்டன் டெல்லி வழியாக மும்பை வந்தடைய வேண்டிய ஏர் இந்தியா 182 கனிஷ்கா விமானம் அயர்லாந்து நெருங்குகையில் டயனமைட் குண்டுகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

இதில் பயணித்த 307 பயணிகள் மற்றும் 22 விமான ஊழியர்கள் உட்பட 329 பேர் உடல்வெடித்து சிதறி கொடூரமாக இறந்தனர்.

`

இந்த விமானத்தை பாபர் கல்சா எனும் கனடா வாழ் சீக்கிய அமைப்பு கடத்தி வெடிக்கவைத்தது பின்னாள் விசாரணையில் தெரியவந்தது. இந்த விமானத்தில் பயணித்த சீக்கிய பயங்கரவாதிகள் விமான கிச்சனில் இருந்த வெண்ணெய் வெட்டும் கத்தியை வைத்து விமானத்தை கடத்தியதாக நம்பப்படுகிறது.

மேலும் ராஜிவ் கொலையில் தொடர்புடைய பேரறிவாளன் பேட்டரி மற்றும் டயனமைட் வாங்கி கொடுத்ததுபோல இந்தர்ஜித் சிங் ரியாத் என்பவன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வெடிபொருட்களை வாங்கிகொடுத்திருந்தான். பின்னர் 2017ல் விடுதலை செய்யப்பட்டான்.

```
```

இந்த சூழலில் உள்நாட்டு பயணத்தின் போது 15.24செ.மீ அகலம் மற்றும் 22.86செ.மீ க்கு மிகாமல் இந்திய உள்நாட்டு விமானங்களில் சீக்கியர்கள் கிர்பானை எடுத்துச்செல்லலாம் என மத்திய விமானத்துறை அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“ஹிஜாப் என்பது வெறும் ஆடை. இதனால் எந்த உயிர்ப்பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த கத்தி சக பயணிகளை அச்சுறுத்தும். பெண்கள் நெய்ல் கட்டரை கூட எடுத்துச்செல்ல அனுமதிக்காத விமானத்துறை கிர்பனை அனுமதிப்பதை மறுபிரீசலனை செய்யவேண்டும்” என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

…..உங்கள் பீமா