Sunday, December 3, 2023
Home > செய்திகள் > மனைவி கண்முன்னே ரியல் எஸ்டேட் அதிபர் அடித்துக் கொலை..! திமுக பிரமுகர் தப்பி ஓட்டம்..!

மனைவி கண்முன்னே ரியல் எஸ்டேட் அதிபர் அடித்துக் கொலை..! திமுக பிரமுகர் தப்பி ஓட்டம்..!

29-11-21/12.33pm

திருச்சி: திருச்சி அருகே மல்லியம்பத்து கிராமத்தில் உள்ள மயான இடத்தை ஊராட்சி நிர்வாகம் மீட்டெடுத்தது. இது தொடர்பான தகராறில் மனைவி கண்முன்னே ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் திமுக பிரமுகரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து கிராமம் செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பல வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவந்தார். இவருக்கு மைதிலி என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மல்லியம்பத்து கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான மயான இடத்தை சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்த மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் விக்னேஸ்வரன் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டெடுத்ததாக தெரிகிறது. இதில் ஊராட்சி தலைவர் விக்னேஸ்வரனுக்கு சிவகுமார் நில மீட்டெடுப்பு விவகாரத்தில் உடனிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று மாலை வீட்டில் இருந்த சிவக்குமாரிடம் அதே ஊரை சேர்ந்த இரண்டுக்கும் மேற்பட்டோர் பேர் தகராறு செய்துள்ளனர். வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த இருவரும் சிவகுமாரை கட்டையால் தாக்கினர்.

`

இதில் படுகாயமடைந்த சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சிவகுமாரை தாக்கிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்க்கையில் சிவகுமார் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்டு உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

```
```

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரபாகரன், தீபக் மற்றும் அவர்களுக்கு மூளையாக செயல்பட்ட திமுக பிரமுகர் கதிர்வேல், பிரபல வாசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி முருகையா ஆகியோர் மீது சிவகுமாரின் மனைவி மைதிலி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

…..உங்கள் பீமா