14-3-22/16.10pm
ராஜஸ்தான் : முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சி செய்து வருகிறது. அங்கு கடந்த வரம் புதன்கிழமை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் இடம்பெற்ற 200 எம்.எல்.ஏக்களுக்கும் ஐ போன் பரிசாக வழங்கப்பட்டது.

மாநில பட்ஜெட் தொடரின்போது சபைமுடிந்து செல்லும்போது ப்ரீப்கேசும் பட்ஜெட் நகலும் கொடுத்தனுப்புவது வழக்கம். அதை தாண்டி காங்கிரஸ் முதல்வர் 70000 மதிப்புள்ள ஐ போனை பரிசாக வழங்கியுள்ளார். மாநில கருவூலம் சிக்கலில் தவிக்க மக்கள் நிதிப்பற்றாக்குறை காரணமாக மாநிலம் திண்டாடிக்கொண்டிருக்க முதல்வரின் இந்த செயல் அனைவரையும் திகைப்படைய செய்துள்ளது.
இதுகுறித்து மாநில பிஜேபி தலைவர் சதிஷ் பூனியா கூறுகையில் ” குலாப் கட்டாரியா மற்றும் ராஜேந்திரஜி ஆகியோர் மற்றும் இதர சட்டமன்ற உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்தபின் மாநில அரசின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு அனைத்து பிஜேபி எம்.எல்.ஏக்களும் தங்களது ஐபோனை அரசிடம் ஒப்படைப்பார்கள். இந்த பட்ஜெட் அழகுநிலையத்திற்கு கொண்டுசென்று நல்ல மேக்கப்புடன் தாக்கல் செய்யப்பட்டது போல தெரிகிறது” என கூறினார்.

கட்டாரியா “எங்கள் அனைவரிடமும் அலைபேசிகள் உள்ளன. அரசின் இந்த செயல் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். பொதுவாக பட்ஜெட்டில் ஒரு பை அல்லது ப்ரீப்கேஸ் தரப்படும். இது தேவையில்லை.” என குறிப்பிட்டார். ராஜஸ்தான் சட்டசபையில் 71 பிஜேபி எம்.எல்.ஏக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா