Saturday, July 27, 2024
Home > செய்திகள் > “நூறு கோடி இந்துக்களை கொல்லுவோம்” என அக்பருதீன் கூறிய வழக்கில் இன்று தீர்ப்பு..!

“நூறு கோடி இந்துக்களை கொல்லுவோம்” என அக்பருதீன் கூறிய வழக்கில் இன்று தீர்ப்பு..!

AIMIM தலைவரும் அசாதுதீன் ஒவைசியின் சகோதரருமான அக்பருதீன் ஒவைசி 2012ல் நடந்த ஒரு கூட்டத்தில் ” இந்தியாவில் உள்ள காவல்துறையை ஒரு 15 நிமிடம் வெளியேற்றுங்கள். நாங்கள் நூறு கோடி இந்துக்களை கொன்றுவிடுவோம்” என கூறியிருந்தார். இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட.

அக்பருதீன் ஒவைசியின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் மற்றும் பிஜேபி தலைவர்கள் தவிர இந்த மத மோதலை தூண்டும் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் இந்த விஷயத்தில் மௌனம் காத்தது. அதனால் இன்னும் உத்வேகமான ஒவைசி 2019ல் மீண்டும் அதே போல ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

15 நிமிடங்கள் காவல்துறை கைகட்டி நில்லுங்கள் . நாங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த அனைவரையும் கொன்று குவிப்போம் என அறைகூவல் விட்டார். அதையடுத்து அக்பருதீன் மீது வழக்கு போடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால் வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

`

இந்த வழக்கு கருணா சாகர் நம்பல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இன்று உடனடியாக ஆஜராகுமாறு கடந்த வாரம் அக்பருக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது.

```
```

மேலும் அசாதுதீன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தியா தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும். தாலிபான்களை தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் எனவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா