15-3-22/10.15am
இந்தியா : 1990 களில் காஷ்மீர் பகுதியில் வாழ்ந்த ஹிந்துபண்டிட்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் இருப்பிடத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தை வைத்து ஹிந்தி இயக்குனர் விவேக் என்பவர் திரைப்படம் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தை திரையிட கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதிகளால் அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது. அசாம் கர்நாடகா மற்றும் பல மாநில முதல்வர்கள் படத்தை கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் அசாம் மத்தியபிரதேசம் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உத்திரபிரதேசத்தில் அனைத்து திரையரங்குகளிலும் காஷ்மீரி பைல்ஸ் படம் திரையிடப்படும் என மாநில முதல்வர் யோகி அறிவித்துள்ளார். கர்நாடக சபாநாயகர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் படத்தை காண அழைப்பு விடுதிருப்பதோடு டிக்கெட்டுகளையும் இலவசமாக வழங்கியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் முதல்வரான சித்தராமையா தான் அந்த படத்திற்கு போவதில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கேரளா காங்கிரஸ் ஒருபடிமேலே போய் அது தீவிரவாத தாக்குதல் என்றும் அதே காலகட்டத்தில் அப்பாவி இஸ்லாமியர்கள் 15000 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ட்வீட் ஒன்றை பதிவிட்டு சில மணிநேரங்களிலேயே அந்த டீவீட்டை நீக்கியுள்ளது. தமிழகத்தில் நாளை சென்னை ரோகினி திரையரங்கில் மாலை 5.30க்கு அந்த படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
….உங்கள் பீமா
