Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > பதறிப்போன பினராயி..! செங்கொடியுடன் சூழ்ந்த பைக்குகள்..!

பதறிப்போன பினராயி..! செங்கொடியுடன் சூழ்ந்த பைக்குகள்..!

14-3-22/11.22am

கேரளா : திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் முதல்வர் பினராயிவிஜயனின் கான்வாய் சென்றபோது அங்கு திடீரென வந்த பைக்குகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 11.30 அளவில் முதல்வர் பினராயிவிஜயன் பாதுகாப்பு வாகனங்களுடன் பொதுமருத்துவமனை ஏ.கே.ஜி. சென்டர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருபதிற்கும் மேற்பட்ட பைக்குகள் சிகப்பு கொடி கட்டிக்கொண்டு வந்தன. அதைக்கண்ட போலிசார் முதல்வரை வரவேற்க கட்சியை சேர்ந்தவர்கள் வருகிறார்கள் என நினைத்தனர்.

அதன்பின்னர் அந்த பைக்குகளில் ஹோட்டல் விளம்பரம் இருப்பதை கண்டுஅவர்கள் வேறு நபர்கள் என உணர்ந்தனர். அதையடுத்து அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர். இதில் ஏற்பட்ட குழப்பத்தில் பல பைக்குகள் விபத்திற்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களை கைதுசெய்த போலீசார் அருகிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லத்திற்கு அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

`
2017 convoy hits protesters

அதன்பின்னர் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள உணவகத்தின் விளம்பரத்திற்காக இந்த பைக் ரைட் என தெரியவந்ததும் அவர்களை எச்சரித்து அனுப்பினர். முதல்வர் செல்லும் வழியில் டிராபிக் திருப்பி விடப்பட்டும் நடந்திருக்கும் இந்த சம்பவம் மாநில போலீசாருக்கும் உளவுத்துறைக்குமிடையே சரியான புரிந்துணர்வு இல்லை என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

```
```

மேலும் கடந்த 2017ல் முதல்வர் பினராய் விஜயனின் கான்வாய் போராட்டக்காரர்கள் மீது ஏற்றி பலர் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா