Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > ஒரே இரவில் எல்லாம் மாறிவிடுமா..! இடஒதுக்கீடு..! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

ஒரே இரவில் எல்லாம் மாறிவிடுமா..! இடஒதுக்கீடு..! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

14-3-22/8.54AM

புதுடில்லி : இந்திய ராணுவ அகாடமியில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை கூறியுள்ளது.

ஜஸ்டிஸ் சஞ்சய் ஜஸ்டிஸ் எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதியரசர்கள் ” நீங்கள் சிவில் எம்பிளாய்மெண்ட்டை NDA வில் பொருத்தநினைக்க கூடாது. ராணுவம் என்பது ஜாதி மதம் கடந்தது. இந்த ஜாதி ரீதியான பிரிவினையை ராணுவத்தில் அமுல்படுத்த எங்களுக்கு விருப்பம் இல்லை.

`

ஒரே இரவில் சமூக புரட்சி சாத்தியமில்லை. அதேபோல ராணுவத்தை ஜாதிரீதியாக பிரித்துப்பார்க்க இயலாது. பெண்களை NDA வில் அனுமதிக்க அரசு முயற்சிக்க வேண்டும். இங்கே பாலின பாகுபாடு களையப்படவேண்டும். முன்னாள் பெண் NDA கேடட்களை இந்திய ராணுவத்தில் அனுமதிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் தேவை. அதனால் வழக்கை வருகிற ஜூலை வரை ஒத்திவைக்கிறோம்” என அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.

```
```

மேலும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் ” NDA முன்னாள் பெண் அதிகாரிகளை ராணுவத்தில் பணியமர்த்த கொள்கை ரீதியிலான முடிவுகள் எடுக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதற்க்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும்” என தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2021ல் NDA வால் நடத்தப்பட்ட தேர்விற்கு பெண்களை அனுமதிக்க மத்திய அரசு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா