26-3-22/14.43pm
குஜராத் : குஜராத் மாநிலம் நதியாட் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகாரளித்தார். அதில் தன்னை வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணத்தை பிடுங்கியது மட்டுமல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
கடந்த 2020 ல் சமூக வலைத்தளம் மூலம் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணிடம் பழகியுள்ளார் யாசர் கான் பதான். அந்த பெண் வெளிநாட்டில் நர்சிங் பயிலவேண்டும் என தன விருப்பத்தை யாசரிடம் கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் ஐந்து லட்ச ரூபாயை ஏமாற்றி வாங்கிய யாசர் துபாய்க்கு விசா வாங்கித்தருவதாக கூறியுள்ளான். துபாய்க்கு அந்த பெண்ணை டூரிஸ்ட் விசாவில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
அங்கு 15 நாட்கள் இருந்த பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் தன்னை இந்தியாவுக்கு அழைத்து வருமாறு கேட்க அவரை மீண்டும் நதியாட் நகருக்கே அழைத்து வந்து தனியாக வீடு எடுத்து அமர்த்தியுள்ளான் யாசர். தனியாக வீட்டில் இருந்த அந்த பெண்ணிடம் யாசர்கான் குடும்பத்தினர் தவறாக நடந்து கொண்டுள்ளனர். பர்தா அணியுமாறு வலியுறுத்தியதுடன் குரான் ஓதும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் தலித் பெண் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த செயல்களால் விரக்தியடைந்த சிறுமி தனது பெற்றோரை தேடிப்போக அவர்களை அவளை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டியடித்திருக்கின்றனர். நொந்துபோன சிறுமி நாடியாட் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் யசர்கான் பதான் அவரது சகோதரர் பைசல் கான், தந்தை ஜாபீர்கான் தாய் ஷெஹன்னாஸ் சுரய்யா கான் உள்ளிட்ட ஒன்பதுபேரில் எட்டுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
…உங்கள் பீமா