25-11-21/15.05pm
மேகாலயா : மமதா பானர்ஜியின் அரசியல் வியூகத்தில் சிக்கி எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்திருக்கிறது. இதனால் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசியல் தலைவர்களில் மமதாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. தன்னுடைய அதிகார துஷ்பிரயோகத்தாலும் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட காவல்துறையை கொண்டும் அனைத்தையும் தனது மாநிலத்தில் சாதித்துக் காட்டுபவர் மமதா. அவரது தற்போதைய நகர்வுகள் பிரதமர் பதவியை நோக்கியே இருக்கிறது.
சமீபத்தில் கோவா மேகாலயா திரிபுரா என உத்திரபிரதேசம் தவிர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் நேரடியாக சென்றார். சொந்த மாநிலத்தில் ஜெய்ஸ்ரீராம் என கூறுபவர்களை சிறையில் தள்ளினாலும் தான் சென்ற மூன்று மாநிலங்களிலும் ஜெய்ஸ்ரீராம் சொல்ல தவறுவதில்லை. புகழ்பெற்ற கோவில்களுக்கும் செல்ல தவறுவதில்லை. இந்நிலையில் கூட்டணி கட்சி எதிர்க்கட்சி என அனைத்து கட்சியின் முக்கிய தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினரால் என அனைவரையும் தனது கட்சிக்கு இழுக்க மமதா மும்முரமாக முயன்று வருகிறார்.
இதன் ஒருபகுதியாக மேகாலயாவுக்கு தனது நம்பிக்கையான குழு ஒன்றை அனுப்பிய மமதாவுக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. மேகாலயாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு எதிர்க்கட்சியாக நீடித்து வரும் நிலையில் தற்போது 12 சட்டமன்ற உறுப்பினர்கள் மமதாவின் திரிணாமூல் கட்சிக்கு தாவியுள்ளனர்.
முன்னாள் காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 11 பேர் கட்சி மாறியிருப்பதால் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. மேலும் சமீபத்தில் கோவா காங்கிரஸ் முன்னாள் முதல்வர் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. மமதாவின் குறி ஒட்டுமொத்தமாக காங்கிரசை சூறையாடுவது தான் என காங்கிரஸ் மாநில தலைமைகள் புலம்பிவருகின்றன.
……உங்கள் பீமா