Friday, June 2, 2023
Home > செய்திகள் > கேரளாவில் விபரீதம்..! கொலை வழக்கில் RSS மீது போலி வழக்கு..!? IPS அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்..!

கேரளாவில் விபரீதம்..! கொலை வழக்கில் RSS மீது போலி வழக்கு..!? IPS அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்..!

27-11-21/10.34AM

கேரளா : NDF எனப்படும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் RSS பெயரை போலியாக சேர்க்க மறுத்த IPS அதிகாரி நேற்று மர்மமான முறையில் விபத்தில் சிக்கினார்.

கடந்த அக்டோபர் 2006ல் NDF என்ற இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த மொஹம்மது பாசல் என்பவன் கேரளா மாநிலம் தலசேரி பகுதியில் குத்திக்கொல்லப்பட்டான். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் சிபிஐக்கு மாற்றியது. அதன் பிறகு இந்த வழக்கை IPS அதிகாரி ராதாகிருஷ்ணன் என்பவர் விசாரித்து வந்தார்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த இருவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் க்கு எந்த தொடர்பும் இல்லை. அதற்கான ஆவணங்கள் சாட்சிகள் எதுவும் இல்லை. வழக்குக்கு தொடர்பில்லாத அமைப்பின் மீது எப்.ஐ.ஆர் பதிய எந்த முகாந்திரமும் இல்லை என உயரதிகாரிகளிடம் கூறியதோடு ராதாகிருஷ்ணன் பத்திரிக்கைகளிலும் பேட்டியளித்திருந்தார்.

`

அப்போதைய கேரளா உள்துறை அமைச்சர் கொடிவேறி அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் பசல் வழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது வழக்கு பதிய கட்டாயப்படுத்தினார். அதை மறுத்த ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என ஆணித்தரமாக கூறினார். இதனால் கொந்தளித்த கொடிவேறி அதிகாரியை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணன் பணிநிறைவு பெற்றார். அவருக்கு பென்ஷன் உள்ளிட்ட எந்த சலுகையும் கேரள கம்யூனிஸ்ட் அரசு வழங்க மறுத்துவிட்டது. அதனால் அதிகாரி தனது ஜீவனாம்சத்திற்க்காக ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிடியாக பணியில் சேர்ந்தார். நேற்று அவர் வீடு திரும்புகையில் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாயினார். அதனால் சம்பவ இடத்திலேயே பலியானார்.

NDF அமைப்பை சேர்ந்தவர்களோ அல்லது கம்யூனிஸ்ட் கைக்கூலிகளோ யாரவது இந்த விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

…..உங்கள் பீமா