Friday, February 7, 2025
Home > அரசியல் > துணை ஜனாதிபதி தேர்தல்..! 25 வருட சாதனையை உடைத்த ஜெகதீப் தங்கர்..!

துணை ஜனாதிபதி தேர்தல்..! 25 வருட சாதனையை உடைத்த ஜெகதீப் தங்கர்..!

vp withpm

டெல்லி : சமீபத்தில் நடந்துமுடிந்த துணை ஜனாதிபதி தேர்தலில் 1997க்கு பிறகு நடந்த ஆறு தேர்தல்களில் அதிகபட்ச வாக்குகளை பெற்று ஜெகதீப் தங்கர் அவர்கள் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 73 சதவிகிதத்திற்கும் மேல் என செய்திகள் தெரிவிக்கின்றன.


தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் முன்னாள் மேற்குவங்க கவர்னருமான ஜெகதீப் தங்கர் எதிர்க்கட்சி வேட்பாளரான மார்கரெட் அல்வாவை தோற்கடித்து இந்தியாவின் 14 ஆவது துணை ஜனாதிபதியாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் தங்கர் அவர்களுக்கு 528 வாக்குகளும் மார்கரெட் ஆல்வாவிற்கு 182 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

72.8 சதவிகித வாக்குகளை பிஜேபி உறுதிசெய்ததுடன் தனது ஆதிக்கத்தையும் நிரூபித்துள்ளது. குடியரசுத்தலைவர் துணை ஜனாதிபதி மற்றும் லோக்சபா சபாநாயகர் வரை அனைத்து முக்கிய பதவிகளையும் பிஜேபி தன்வசம் தக்கவைத்துள்ளது. 1997க்கு பிறகு நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தற்போது பதிவான 72.8சதவிகித வாக்குகளே அதிக வித்தியாசம் என TOI தெரிவித்துள்ளது.

`

FOR Business Listing www.tsimart.com www.tsimart.com

ஆனாலும் 1992ல் பதிவான 701 வாக்குகளில் 700 வாக்குகள் பெற்று அதிக வெற்றி வித்தியாச பட்டியலில் கே.ஆர். நாராயணன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 71 வயதாகும் ஜெகதீப் தங்கர் அவர்களே சங்கபரிவாரில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்காத முதல் பிஜேபி வேட்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

```
```




ராஜஸ்தானில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த தங்கர் ராஜஸ்தானின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் 1989ல் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய தங்கர் ஜுன்ஜுனுவில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திரசேகர் தலைமையிலான ஜனதாதள அரசில் இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

2019ல் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் பிஜேபியால் தற்போது துணை ஜனதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2003ல் பிஜேபியில் இணைந்தார். மேலும் இவர் வழக்கறிஞராக இருந்தபோது பல ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களுக்கு எதிராக வாதாடியுள்ளதாக கூறப்படுகிறது.