Saturday, July 27, 2024
Home > அரசியல் > பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்..! பிஜேபியில் இணைந்த பிரபல டபிள்யூ.டபிள்யூ.இ வீரர்..!

பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்..! பிஜேபியில் இணைந்த பிரபல டபிள்யூ.டபிள்யூ.இ வீரர்..!

10-2-22/16.10pm

பஞ்சாப் : உத்திரபிரதேசம், ஜார்கன்ட், மணிப்பூர், பஞ்சாப் கோவா உள்ளிட்ட ஐந்துமாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் உத்திரபிரதேச தேர்தல் இன்று முதல் தொடங்கியுள்ளது. ஐந்துமாநிலங்களிலும் பிஜேபி உள்ளிட்ட பல கட்சிகள் மக்களை கவர பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன.

இந்நிலையில் பஞ்சாப் அரசியலில் திருப்பமாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை ஆரம்பித்தார். தேர்தலையொட்டி பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தார். இதனிடையே வருகிற பிப்ரவரி 20 அன்று பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக தொழில்முறை மல்யுத்த வீரரும் டபிள்யூ.டபிள்யூ.இ வீரருமான தி கிரேட் காளி என அழைக்கப்படும் தலிப் சிங் ராணா இன்று பிஜேபியில் இணைந்துள்ளார்.

`

இதுகுறித்து புதுடெல்லியில் உள்ள பிஜேபி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ” பிஜேபியில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் அவரை சிறந்த பிரதமர் என நிரூபிக்கிறது. தேசத்தின் வளர்ச்சிக்காக அவரின் ஆட்சியில் ஒரு பங்காக நான் ஏன் இருக்கக்கூடாது என எண்ணியே பிஜேபியில் இணைந்துள்ளேன். கட்சியின் தேசியக் கொள்கை என்னை வெகுவாக ஈர்த்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

```
```

இவர் கடந்த வருடம் நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு மக்களை விவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2000ஆவது ஆண்டு அவர் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொள்ளும் முன்னர் காவல்துறை அதிகாரியாக இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

….உங்கள் பீமா