Saturday, July 27, 2024
Home > செய்திகள் > தரமற்ற சாலைகள்..! துடிதுடிக்க இளைஞர் மரணம்..! சாலையை சீர் செய்யாமல் சிலை வைக்குமா அரசு..??

தரமற்ற சாலைகள்..! துடிதுடிக்க இளைஞர் மரணம்..! சாலையை சீர் செய்யாமல் சிலை வைக்குமா அரசு..??

2-11-21 / 5.40am

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். நேற்று சாலையில் நிகழ்ந்த ஒரு விபத்து இளைஞனின் உயிரை பறித்தது.

சென்னையில் விடாமல் பெய்த மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. ஆங்காங்கே சாலைகளில் பெரிய பெரிய பள்ளங்கள் உண்டானது. மேலும் ஆங்காங்கே பராமரிப்புக்காக பொதுப்பணித்துறையால் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில் நேற்று சென்னை அண்ணாசாலையில் மழையால் சாலையில் ஆங்காங்கே சிறு சிறு பள்ளங்கள் ஏற்பட்டன. அந்த சாலையில் தனது இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த சாப்ட்வெர் எஞ்சினீயரான முஹம்மது யூனுஸ் (32) சாலையில் மழைநீரால் மூடி இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தை விட்டார்.

`

அதில் நிலைதடுமாறி அக்கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசுப்போக்குவரத்து பேருந்தில் மாட்டிக் கொண்டார். பேருந்தின் பின்சக்கரம் அவர்மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்தை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் திகைத்துப்போயினர். மேலும் நேற்று சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களால் பல் விபத்து நடந்திருப்பதாக பொதுமக்கள் மேலும் கூறினர். தமிழக அரசு சிலை வைக்க வேகம் காட்டுவதை போல சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே மக்களின் கோரிக்கை.

```
```

…..உங்கள் பீமா

அண்ணாசாலை #விபத்து #இளைஞர்மரணம் #pothole #annasalai #accident #citybus