Friday, September 22, 2023
Home > செய்திகள் > சீதா தேவி கதாபாத்திரத்தில் கங்கனா..! கோர்ட் கெடு..!!

சீதா தேவி கதாபாத்திரத்தில் கங்கனா..! கோர்ட் கெடு..!!

பாலிவுட்டை சேர்ந்த பாடலாசிரியர் ஜாவேத் அக்தர். இவர் கங்கனா ரனாவத் மீது மான நஷ்ட வழக்கு போட்டிருந்தார். அந்த வழக்கின் மறு விசாரணை நேற்று மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற செப்டம்பர் 20க்குள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தனர்.

2020 ஜூலை 19 ரிபப்ளிக் தொலைகாட்சிக்கு கங்கனா அளித்த பேட்டியில் சுஷாந்த் சிங் மரணத்தில் பாலிவுட்டை சேர்ந்த சிலருக்கு தொடர்புண்டு என கூறியதோடு ஜாவேத் அக்தருக்கும் இது தெரியும் என கூறியதாக தெரிகிறது.

அதையடுத்து 2021 பிப்ரவரி மாதம் ஜாவேத் கங்கனா மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இதுவரை மூன்றுதடவை கங்கனா வாய்தா வாங்கியதாக தெரிகிறது. நேற்று கங்கானாவின் வழக்கறிஞர் ஜெய் பரத்வாஜ் கங்கானாவின் உடல்நிலையை காரணம் காட்டி வர இயலவில்லை என கூறினார்.

`

இதை கண்டித்த நீதிபதிகள் கங்கனா வரும் 20ம் தேதிக்குள் ஆஜராகவில்லையெனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என கண்டிப்புடன் கூறினர்.

இந்நிலையில் இராமாயண சீதா தேவி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கரீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் 13 கோடிக்கும் மேலாக சம்பளம் கேட்டதோடு விநியோகஸ்த உரிமையையும் கேட்டிருக்கிறார்.

இதனால் கடுப்பான பட தயாரிப்பாளர் கரீனாவை தூக்கியெறிந்துவிட்டு கங்கனா ரனாவத்தை சீதா தேவி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுவிட்டார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் முழுவதும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் இந்து மதத்தை தாக்கியும் சனாதன தர்மத்தை அவதூறாக பேசியும் ஒரே கோட்டில் பயணித்துக் கொண்டிருக்க,

அக்ஷய்குமார் கங்கனா உட்பட வெகு சிலர் மட்டும் தேசிய பாதையில் சுழன்று கொண்டிருக்கின்றனர். இதனாலேயே இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும் தொழில் ரீதியிலும் இடையூறு வருவதாக பாலிவுட்டில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.