30-12-21/13.36pm
ரெய்ப்பூர் : இந்து துறவியான காளிச்சரன் மஹாராஜ் இன்று சட்டீஸ்கர் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து துறவியான காளிச்சரன் மஹாராஜ் மத்திய பிரதேசம் கஜுராஹோ நகர் பாகேஸ்வர் தம் கோவில் அருகே வசித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிறன்று நடந்த ஒரு கூட்டத்தில் ” யார் வேண்டுமானாலும் காந்தியாகலாம். ஒரு சாதாரண மனிதன் அவனது நடவடிக்கையாலும் செய்கையாலும் மஹாத்மாவாகவோ இல்லை துறவியாகவோ அறியப்படுகிறான்.
உடுத்தும் உடை அவனை மஹாத்மா ஆக்குவதில்லை. என்னை பொறுத்தவரை அவர் மோகன்லால் கரம்சந்த் காந்தி மட்டுமே.” என கூறியதோடு காந்தி ஒரு சாதாரண மனிதர்தான் என குறிப்பிட்டிருந்தார். இதனால் கொந்தளித்த காங்கிரஸ் காந்தியை அவமதித்ததாக கூறி புனே வில் ஒரு வழக்கும் அகோலா பகுதியில் ஒரு வழக்கும் ரெய்ப்பூரில் ஒரு வழக்கும் என மூன்று எப்.ஐ.ஆர் களை உடனடியாக பதிவு செய்தது.

கைது நடவடிக்கையும் உடனே பாய்ந்தது. காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கர் காவல்துறை இன்று மத்யபிரதேசத்திற்கு விரைந்துவந்து அவரை கைது செய்து அழைத்துப்போயிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பிஜேபி ஆளும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் காட்டும் வேகத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட பிஜேபி காண்பிக்கவில்லையே என பிஜேபி தொண்டர்கள் வருத்தம் தெரிவித்தது வருகின்றனர்.
பாரத பிரதமர் மோடி குறித்து ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடும் வகையிலும் பலர் பேசுகையில் அவர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கை கூட எடுக்க தயங்குகிறது பிஜேபி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் மேற்கு வங்க இந்துக்கள் அடித்துக் கொல்லப்பட்டபோதும் கேரளாவில் தொடர்ந்து பிஜேபியினர் மற்றும் இந்து அமைப்பினர் மீது தொடர் தாக்குதல் கொலை முயற்சி உயிர்பலி என நடைபெறுகிறபோதும் பாஜக அமைதி காப்பது ஏன் என நடுநிலையாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
…..உங்கள் பீமா