Friday, May 1, 2026
Home > செய்திகள் > மசூதி அருகே ஹோலி கொண்டாடிய மக்கள்..! அடுத்து நடந்த விபரீதம்

மசூதி அருகே ஹோலி கொண்டாடிய மக்கள்..! அடுத்து நடந்த விபரீதம்

4-4-22/13.22PM

கர்நாடகா : மசூதி அருகே ஹோலி கொண்டாடிய ஹிந்துக்கள் மீது அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் கல்லெறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இருபிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் யரதோனா கிராமத்தில் அமைந்துள்ளது ஜமா மசூதி. இங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் சில ஹிந்துக்கள் அங்கு ஹோலி கொண்டாடியதாக தெரிகிறது. அதையடுத்து அங்குள்ள இஸ்லாமியர்கள் சிலர் அவர்களை கண்டித்ததுடன் அவர்கள் மீது கல்லெறிந்துள்ளனர். பதிலுக்கு அவர்களும் கல்லெறிந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்த ராய்ச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் இல்லை. அதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதில் கல்லெறி சம்பவம் நடந்தது உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்து புகார் எதுவும் பதிவாகாததால் அடையாளம்தெரியாத நபர்கள் 40 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ref.image

மேலும் மாவட்ட எஸ்பி கிராமத்து மக்களிடம் புகாரளிக்கவும் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டவும் மக்களை சந்தித்தார். அப்போதும் யாரும் முன்வரவில்லை.அதைத்தொடர்ந்து 107,151 இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் சட்டப்பிரிவு 151 மக்களை காவலில்வைத்து விசாரிக்க காவல்துறையை அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து இருபிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் சூழல் நிலவும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மேலும் அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

….உங்கள் பீமா