Tuesday, October 15, 2024
Home > செய்திகள் > இரு பிரிவினரிடையே கடும் மோதல்..! கிராமமே மதம் மாறப்பபோவதாக மிரட்டல்..!!

இரு பிரிவினரிடையே கடும் மோதல்..! கிராமமே மதம் மாறப்பபோவதாக மிரட்டல்..!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே தீயத்தூர் என்ற கிராமத்தில் இரு வேறு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் பறையர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதை கண்டித்து அந்த சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் இஸ்லாமிற்கு மதம் மாறப்போவதாக மீடியாக்களில் செய்திகள் பரவியது.

இதையறிந்த பிஜேபி தலைவர்களுள் ஒருவரான தடா பெரியசாமி அவர்கள் அந்த கிராமத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே தீயத்தூர் கிராமத்தில் இரு வேறு சமுதாயத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் பறையர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

`

இதனால் பறையர் சமூக மக்கள் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறப் போவதாக மீடியாக்களில் செய்தி கேள்விப்பட்டு அந்தப் பகுதியில் இரண்டு சமுதாய மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன். மதம் மாறுவதால் எந்த தீர்வும் இல்லை என்றும், மீனாட்சிபுரத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதனால் எவ்வளவு சிரமப் படுகிறார்கள் என்பதை எடுத்துக்கூறி சட்ட ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் உதவி புரிவதாக ஆறுதல் கூறினேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

```
```

..உங்கள் பீமா