Monday, February 10, 2025
Home > செய்திகள் > மகா மனிதன் உதயநிதி ஸ்டாலின்..! புகழ்ந்து தள்ளிய பிரபல டைரக்டர்..!

மகா மனிதன் உதயநிதி ஸ்டாலின்..! புகழ்ந்து தள்ளிய பிரபல டைரக்டர்..!

23-12-21/10.42am

சென்னை : ஹாலிவுட் கதையை உருட்டி திராவிட மாவில் முக்கி தமிழில் திரைப்படமாக கொடுக்கும் பிரபல டைரக்டர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நடிகரான உதயநிதி ஸ்டாலினை பாராட்டி தள்ளிவிட்டார்.

பிரபல ஹாலிவுட் திரைப்படத்தை தனது ஸ்டைலில் மாற்றி எடுக்கும் இயக்குனரான மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதிஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார். அவர் கூறியதாவது “சைக்கோ படம் ஷூட்டிங் எடுத்தது தேர்தல் பிரச்சார நேரம். நான் எட்டு மணிநேரம் படப்பிடிப்பு என்று கூறினேன். அதற்க்கு அவர் ஆறுமணி நேரமாக குறைக்க முடியுமா என கேட்க நான் சரி என கூறினேன்.

18 மணி நேரம் தொடர்ச்சியாக தூங்காமல் பிரச்சாரம் செய்துவிட்டு அப்படியே அர்ப்பணிப்பு உணர்வுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து பணியாற்றினார். 200 கிலோமீட்டர் பயணப்பட்டு எந்த களைப்பும் சலிப்பும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினார். மேலும் அவர் அரசியலில் ஜெயிப்பார் என தெரியும். ஒரு கதாநாயகனுக்கு தான் உடம்பெல்லாம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் . அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்தபோது அந்த வீடியோக்களை பார்த்த போது அவரை கதாநாயகனாக உணர்ந்தேன்.

`

அரியாசனத்திற்கு வந்த பிறகு ஒரு பதவிக்கு வந்த பிறகு இப்படி ஆய்வு செய்தது ஸ்டான்ட் கிடையாது. அது அவரின் நல்ல எண்ணம். தற்போது தான் தமிழகம் அமைதியாக இருக்கிறது. நல்லாட்சி நடக்கிறது. மக்கள் கவலைகளை மறந்து தங்கள் வேலையை கவனிக்கின்றனர். ஸ்டாலின் ஐயாவையும் உதயநிதி தம்பியையும் நான் வியப்பாக மக்களின் நம்பிக்கையாக பார்க்கிறேன். உதயநிதி நிஜமான கதாநாயகன் மட்டுமல்ல மகா மனிதன்” என கூறியுள்ளார்.

“கழிவறையை ஆய்வு செய்தது சரி அதன்பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எந்த ஊடகமும் பேசவில்லையே ஏன். மக்களுக்கு இலவச கழிப்பறையை கட்டித்தந்தவர் பாரத பிரதமர் மோடி. அவரை பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுகுறித்து மிஷ்கினுக்கு தெரியுமா” என பிஜேபியினர் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

```
```

…..உங்கள் பீமா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மெட்ராஸ் டெலிகிராம் வாட்சப் க்ரூப்பில் விருப்பமுள்ளவர்கள் இணையுங்கள் ..https://chat.whatsapp.com/Ia22Luu5IYy1iVHTjLGe8Z