Friday, September 22, 2023
Home > பொழுதுபோக்கு > இதுவரை நல்ல முதலமைச்சரை பார்க்கவில்லை- நேற்று..! தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு இன்று..!

இதுவரை நல்ல முதலமைச்சரை பார்க்கவில்லை- நேற்று..! தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு இன்று..!

22-12-21/15.13pm

சென்னை : கருத்து கூறுகிறேன் பேர்வழி என்கிற பெயரில் கம்யூனிச சித்தாந்தங்களை திரைத்துறையில் தனது படைப்பின் மூலம் வலிந்து திணித்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகை சங்கவி மற்றும் ராகவி மூலம் நடிகர் விஜயின் மார்க்கெட்டை நிலைநிறுத்தியவர் ஆவார்.

மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி குறித்து அடிப்படை அறிவே இல்லாமல் முதலில் குரல் கொடுத்தவர் சந்திரசேகர். மேலும் தான் ஒரு இந்து என கூறிக்கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான் ஒரு கிறித்தவன் என பல்டி அடித்த பயில்வான் இவர். விஜய் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியதும் தனது தாய் தந்தையரான ஷோபா மற்றும் சந்திரசேகரிடமிருந்து விலகினார்.

சமீபத்தில் எஸ்.ஏ.சி செய்த அரசியல் காமெடி நடிகர் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்து அதை அன்று மாலையே கலைத்தது ஆகும். திடீர் திடீரென மூளைக்குள் பல்பு எரிந்து கருத்துக்களை வாய் வழியாக தெளிப்பவர் சந்திரசேகர். இப்படி இவர் தெளித்த முத்தான கருத்து ஒன்று அவரது உறவினரை பாதித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

`

சிலம்பரசன் நடித்து வெளிவந்த மாநாடு பட வெற்றிவிழாவில் பேசிய இவர் ” மத அரசியல் இந்தியாவையும் வாரிசு அரசியல் தமிழ்நாட்டையும் இந்தப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். காமராஜருக்கு பிறகு ஒரு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்கவில்லை” என கூறினார்.

இன்று மாஸ்டர் திரைப்படத்தை இயேசு ஆசீர்வதிப்பார் என மேடையிலேயே கூறிய சந்திரசேகர் உறவினரும் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளருமான பாதர் ஜான் பிரிட்டோ வீட்டில் வருமானவரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

…..உங்கள் பீமா