Tuesday, April 22, 2025
Home > அரசியல் > அனல் பறக்கும் அரசியல்…! பிஜேபி IT விங் தலைவர் கைது..?

அனல் பறக்கும் அரசியல்…! பிஜேபி IT விங் தலைவர் கைது..?

07-01-22/10.00AM

மஹாராஷ்டிரா : பிஜேபி IT விங் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக எழுந்த புகாரை ஒட்டி பிஜேபியினர் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிஜேபி ஆட்சி இல்லாத மாநிலங்களில் பிஜேபி தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் எந்த ஒரு வாரண்டும் இல்லாமல் கைது செய்யப்பட்டு வருவது அரசியல் காழ்ப்புணர்ச்சியை எடுத்துரைக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் முதல் கைதாக பிஜேபி பிரமுகர் கல்யாணராமனை சிறையிலடைத்தது.

அதை தொடர்ந்து பிஜேபியின் 23 பேருக்கும் மேலானோரை கைது செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா பிஜேபி மாநில தலைவர் போலீசாரால் தாக்கப்பட்டு பல அத்துமீறல்களுடன் கைது செய்யப்பட்டார். காரணம் கொரோனா விதிமீறல் என கூறப்படுகிறது. இந்நிலையில் போட்ட ஒரே டீவீட்டுக்காக மஹாராஷ்ட்ரா போலீசார் ஜிதன் கஜாரியா என்பவரை கைது செய்துள்ளது.

`

ஜித்தன் கஜாரியா தனது டீவீட்டில் உத்தவ் தாக்ரே மனைவியான ராஷ்மி தாக்ரேவின் புகைப்படத்தை பகிர்ந்து மும்பையின் ராப்ரி தேவி என குறிப்பிட்டிருந்தார். மேலும் 2013ல் அஜித் பவட் ” விவசாயத்திற்கு தேவையான நீர் அணைகளில் இல்லை என்றால் நானா சிறுநீர் கழிக்க முடியும்” என விவசாயிகள் போராட்டம் பற்றிய சர்ச்சையான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். இவர் சிவசேனா தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் இந்த டீவீட்டையும் குறிப்பிட்டு இன்னொரு டீவீட்டையும் பகிர்ந்திருந்தார் ஜிதன். இதையடுத்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை எந்த ஒரு வாரண்ட்டோ முறையான ஆவணங்களோ இல்லாமல் கைது செய்தது. நேற்று கிட்டத்தட்ட 10 மணி நேரங்களாக சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

```
```

சிவசேனா அரசின் இந்த சர்வாதிகார போக்கிற்கு பல்வேறுதரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் சிவசேனா பற்றி கருத்து வெளியிட்ட விமானப்படை அதிகாரி சமீபத்தில் சிவசேனா குண்டர்களால் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

……உங்கள் பீமா