Saturday, July 27, 2024
Home > அரசியல் > தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! பிஜேபியினர் கொண்டாட்டம்..!

தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! பிஜேபியினர் கொண்டாட்டம்..!

25-2-22/12.35pm

சென்னை : பணப்பட்டுவாடா தகராறு கைது என நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீண்ட காலத்திற்கு பிறகு பல கட்சி கூட்டணிகளுடன் சேர்ந்து திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வியுற்ற அதிமுக இந்தமுறையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதனிடையே பிஜேபி தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக ஐந்து சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்று தன்னை முன்னிறுத்திக்கொண்டுள்ளது. ஆனால் இதை ஒப்புக்கொள்ள மறுத்த திராவிடக்கட்சிகளின் அபிமானிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் அழகிரி உட்பட பலர் காங்கிரஸ் தான் மூன்றாவது பெரிய கட்சி என கூறியதுடன் பிஜேபியை விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பிஜேபி 92,6878 வாக்குகள் பெற்று 5.41 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் அதிமுக 25.15% சதவிகிதமும் திமுக 43.13 சதவிகிதமும் பெற்றுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் 566746 வாக்குகளே பெற்று 3.31% என்ற நிலையில் நான்காவது இடத்தில் உள்ளது.

`

சனாதனத்தை வேரறுக்க கிளம்பிய விசிக 1,13,924 வாக்குகள் பெற்று 0.67 சதவிகிதத்துடன் 12ஆவது இடத்தில் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி 1,08879 வாக்குகள் பெற்று 13ஆவது இடத்தில் உள்ளது.

```
```

இந்த கட்சிகளையெல்லாம் பின்னால்தள்ளி ஐந்தாவது இடத்தில் 2,74,663 வாக்குகளுடன் 1.60 சதவிகிதத்துடன் இருக்கிறது நாம் தமிழர் கட்சி. திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக பிஜேபியை மக்கள் அங்கீகரித்திருப்பதையே இந்த முடிவு எடுத்துரைப்பதாக பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா